Sunday, April 19, 2026

டோனால்ட் டிரம்ப்மீது பதவிநீக்கத் தீர்மானம்!

அமெரிக்க அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஜனநாயகக் கட்சி, அதிபர் டொனால்ட் டிரம்ப்மீது, பதவி நீக்க தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

கென் மார்ட்டின் தலைமையிலான ஜன-நாயகக் கட்சி உறுப்பினர்கள் குடியரசுக் கட்சித் தலைவருமான அதிபர் டொனால்ட் டிரம்ப்மீது 13 பிரிவுகளைக் கொண்ட பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கை, அமெரிக்க அரசியல-மைப்பின் அடிப்படைச் சட்டங்களை டிரம்ப் மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப், தன்னிச்சையாக இரான், ஏமன், லெபனான், சிரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீனத்தின் காசா மீதெல்லாம் போர் தொடுத்ததாக குற்றஞ்-சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், பனாமா, கொலம்பியா, கியூபா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளை இராணுவத் தாக்குதல் நடத்து-வதாக மிரட்டியதாகவும் டிரம்ப்மீதான பதவி நீக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு சட்ட அமலாக்க அமைப்புகளை இராணுவ மயமாக்கிய-தாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய-தாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதக் கைது நடவடிக்கை, நாடு-கடத்துதல், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக பழிவாங்குதல், சட்டத்தின் ஆட்சியை சீர்-குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட-தாகவும் டோனால்டிற்கு எதிரான பதிவி-நீக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி முன்னெடுத்துள்ள இந்தத் தீர்மானம், அமெரிக்க அரசியலில் மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும். குறிப்பாக இரு கட்சி அரசியல் இடம்பெற்றுள்ள அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இடையேயான கடும்போக்கு அதிகரிக்கும் சூழல் எழுந்துள்ளது.

டிரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்-சாட்டுகள், அவரின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

டிரம்ப் மீதான இத்தகைய நடவடிக்கை, அமெரிக்காவின் சர்வதேச நிலைப்பாட்டை பாதிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு -ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தத் தீர்மானம் அந்த விமர்சனங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைகிறது.

மொத்தத்தில், ஜனநாயகக் கட்சியின் இந்த முயற்சி, டோனால்ட் டிரம்பிற்கு மட்டுமல்ல; அமெரிக்க அரசியலிலும் கடும்நெருக்-கடியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு அரசியல் அவதானியர் கருதுகின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை