
மார்ச் மாதம் 30- ஆம் நாள் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மாலை வேளையில் அகால மரணம் அடைந்த உதயகுமார் என்ற 7 வயது சிறுவனுக்கு ஒரு அறவாரியத்தின் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆசிரமத்தின் சார்பில் அங்கிருந்து பத்துமலை தமிழ்ப் பள்ளிக்கு சென்றுவர போக்குவரத்து வசதியும் வழங்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியதுதான்.
அதேவேளை, பள்ளி முடிந்து சம்பந்தப்பட்ட மாணவனை அதே அறவாரியத்தைச் சேர்ந்த வாகனத்தில் அழைத்துவந்து இறக்கி விடுவதுஅன்றாட வழக்காக இருந்துள்ளது.
சம்பவ தினத்தன்று உதய குமார் வாகனத்தில் இருந்து இறங்கிய பொழுது முறையாக கவனிக்காமல் அதே வாகனத்தால் மோதப்பட்டு அந்த வாகனத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதால் இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு அதிகமான ரத்தம் வெளியேறி மரணம் அடைந்திருக்கிறார்.

சம்மந்தப்பட்ட நேரத்தில் அந்த ஓட்டுனர் என்ன நிலையில் இருந்தார் என்பது தெரியவில்லை அவர் கைத்தொலை-பேசியை பயன்படுத்திக் கொண்டு அலட்சியப் போக்கில் இருந்தாரா என்பதும் தெரியவில்லை. எது எப்படி இருந்த பொழுதிலும் ஒரு மாணவன் இறந்த நிலையில் சம்பவம் நடந்து பத்து நாட்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
உயிர்ப்பலி ஏற்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பில் எந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது? சம்பந்தப்பட்ட ஆடவரை விசாரித்த காவல்துறை அதிகாரி 10 மணி நேரத்தில் விடுவித்ததுடன் சம்பந்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றி வைக்காமல் விட்டு விட்டார்.

இதற்கெல்லாம் முறையான விசாரணை நடத்தி நடந்து விட்டு சம்பவத்திற்கும் அந்த ஏழை குடும்பத்திற்கும் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்று பாஸ்கர் டீ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாஸ் கட்சியின் கோம்பாக் வட்டார தலைவர்களான உஸ்தாஸ் ஹிஸ்புல்லா முகமட் ரிடுவான், DHPP சரோஜினி முருகையா, LKK தலைவர் மஸ்தா அப்துல்லா, கடியா முகமட், இதனுடன் ஜேக்கப், செமிஞி சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி பூபாலன் உள்ளிட்டோர் பாஸ்கர் டீ சார்பில் சம்பந்தப்பட்ட இல்லத்திற்கு சென்று சிறிய அளவில் நிதி உதவியும் அளித்தனர்.


