
மலேசிய காவல் படையின் 219 ஆம் ஆண்டு தினம் நேற்று தேசிய அளவில் மிகுஎழுச்சியோடும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.
தேசிய காவல் படை தலைமையகம் புக்கிட் அமான், மாநிலங்களின் தலைமை அலுவலகங்கள் மாவட்ட அலுவலகங்களில் எல்லாம் அதனுடைய தாக்கம் இன்றும் தொடர்கிறது.

காலம் கருதாத பணி,ச் சூழலுக்கு ஆட்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் காவலர்களும் ஆணாயினும் பெண்ணாயினும் உயிருக்கு அஞ்சாத துணிவிற்கும் சொந்தக்காரர்கள்.
இத்தகையோர் இந்த தருணத்தில் உள்ளூர அடையும் இன்பத்திற்கும் பெருமிதத்திற்கும் எல்லை இல்லை.




