
சிறைக்காவலில் இருந்தபோது 26 வயது வினேஸ்வரனின் மரணம் குறித்து, சுதந்திர-மான, வெளிப்படையான விசாரணை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வளரும் வழக்கறிஞருமான பொன் வேத மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
இந்த வழக்கு “மூடி மறைக்கப்பட்ட இன்னும் ஒரு விவகாரமாக மாறும் அபாயம் உள்ள-தாகவும் அவர் எச்சரித்தார்.
“வினேஸ்வரனின் மரணத்தால் நிலை குலைந்துள்ள அவரின் 53 வயதான தந்தை
மலேசியாவில் மறக்கப்பட்ட ஏழைகளின் முகம்” என்று போன். வேத மூர்த்தி கூறினார்.
போதைப்பொருளைப் பயன்படுத்திய சந்தே-கத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வினேஸ்வரன்மீது, சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு போதைப்பொருளைப் பயன்படுத்தியது உறுதியானதாகக் கூறப்பட்ட நிலையில், அவரின் குடும்பத்-தினரால் 3,000 வெள்ளி பிணைத்தொகை-யைத் திரட்ட முடியாத நிலையில், கடந்த மே 3-ஆம் நாள்(2026) அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் கோல குபு பாரு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், ஜூலை 20 அன்று, பிற்-பகல் 2:30 மணியளவில், வினேஸ்வரனின் தந்தைக்கு சிறையிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அதில், அவரது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நான்கு நிமிடங்கள் கழித்து வந்த, மற்றொரு அழைப்பில் அவரின் மகன் இறந்துவிட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
“ஆரோக்கியமான 26 வயது இளைஞர் ஒரு-வர் அரசாங்க காவலில் இருந்த நிலையில் எப்படி சடலமாக வெளியேற முடியும்?” என்று பொன் வேதமூர்த்தி கேள்வி எழுப்பிவுள்ளார்.
காவலில் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் பதில்கள் தேவை என்றும், அரசுக் காவலில் நிகழும் விளக்கப்படாத ஒவ்வொரு மரணத்-திற்கும் ஒரு சுதந்திரமான விசாரணை அவசியம் என்றும் இந்த விவகாரம் தொடர்-பில் நேற்று ஜூலை 23 வியாழன் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன் வேத மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
“இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட, காவலில் நிகழும் மரணங்களின் தொடர்ச்சியான போக்கை பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறேன். என் கவலைகள் இனம் அல்லது மதத்தை விட, பொது நீதியை பற்றியதே” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“காவலில் உள்ள இந்துக்களை காவல்துறை கொலை செய்வதாக நான் குற்றம் சாட்டிய-தாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்பு கூறிய கருத்தையும் அவர் நிராகரித்தார்.
“நியாயத்தின் அடிப்படையில் தான் தொடர்ந்து கூறிவருவதை இது, முற்றிலும் திரித்துக் கூறுவதாகும். இது இனத்தைப் பற்றியது அல்ல; மதத்தைப் பற்றியதும் அல்ல; மாறாக, இந்தப் பிரச்சினையை, “சீருடை அணிந்த சகோதரத்துவம்” என்று பொன் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
பொது நீதிக்கு பெரும் தடையாக மாறியுள்ள மௌனக் கலாச்சாரம் தொடர்கிறது
“நேர்மையான அதிகாரிகள் இந்தக் கட்ட-மைப்பில் கைதிகளாகி விடுகின்றனர், அதேசமயம் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துபவர்கள், இத்தகைய கட்டமைப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த சட்ட அதிகாரி ஒருவரின் மரணமும் இதில் அடங்கும். 24 மணி நேரப் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதி கொண்ட ஒரு அரசாங்கக் கட்டிடத்திற்குள், அவரின் கால்களும் கழுத்தும் கேபிள் துணை கொண்டு கட்டப்பட்ட நிலையில், அவரின் அலுவலகத்தில் அவர் சடலமாகக் காணப்பட்டார்.
மேலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்-தின் (MACC) தலைமையகத்தில் வாக்கு மூலம் அளிக்கச் சென்ற ஒரு பெண், காவல் துறை சீருடையும் மேலங்கியும் அணிந்த நபர்களால் தான் பயணம் செய்த வாடகைக் காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளி-யேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட பெண் காணாமல் போனதை-யும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்தி மீன் டப்பாக்கள் மற்றும் அரிசிப் பொட்டலங்களைத் திருடியதற்காக விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத் தண்டனையில் இரண்டு வருடங்கள் கழித்தபிறகு, தனது சிறை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக் கப்பட்ட 22 வயது அபலை இளைஞனின் குடும்பத்திற்காக வாதாடியதையும் நினைவு கூர்ந்தார்.
ஒரு மரண விசாரணையில் கொலைக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்ட போதிலும், மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
“இந்தக் கலாச்சாரம் பொறுப்புக்கூறலை மௌனமாக்கி, பொது நீதியை புறக்கணிக்-கிறது என்று சட்ட வல்லுணருமான பொன் வேதமூர்த்தி அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


