
மலேசியவாழ் இந்திய முஸ்லிம் சமுதாய மீட்ச்சிக்காக கிம்மா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று கிம்மா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.
கிம்மா தோற்றம் கண்டு, இப்போது 50ஆம் ஆண்டை எட்டுகிறது. மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் நலன்கருதி கிம்மா சேவையாற்றி வருகிறது.
இந்நாட்டில் மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள் உணவகம், துணியகம், நகையகம் உட்பட பாரம்பரிய தொழில் துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.

இந்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம் உணவகங்கள் உள்ளன. இந்த உணவக உரிமையாளர்கள் இப்போது அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் அவதிப் படுகிறார்கள்.
இதற்கு அரசாங்கம் தீர்வு காண முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் மானியம் கோரி விண்ணப்பம் செய்தால் கிம்மா கட்சிக்கு கிடைப்பதில்லை.
நாங்கள் பூமிபுத்ரா இல்லை என்று காரணம் கூறி தட்டிக் கழிக்கின்றனர். ஆகவே கிம்மா கட்சிக்கு மானிய கிடைக்க உதவி புரியும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய முன்னணி கட்சியுடன் நாங்கள் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறோம். மேலும் தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக கிம்மாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
இன்று உலக வாணிப மையத்தில் நடை பெற்ற கிம்மா கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் தலைமை உரையாற்றிய போது அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்

தேசிய முன்னணி தலைவரும் துணைபா பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன், ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.



