Tuesday, September 22, 2026

பல்லடத்தில் திமுக வென்றால் பாஜக-வின் புதுடில்லி நகர்வு தவிடுபொடி!

தமிழ் நாட்டு தேர்தல் களத்தில் திமுக-வின் முழக்கமான ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ் நாடு வெல்லட்டும்’ என்பது பலிப்பதற்கான கூறுகள் பலிச்சென தெரிந்தாலும், ஜன-நாயக முறைப்படி தமிழ் நாட்டைத் தொட முடியாத பாஜக, மற்ற மாநிலங்களைப் போல தமிழ் நாட்டிலும் இம்முறை ஏதாவது கொல்லைப்புற நகர்வுக்கு வாய்ப்பிருக்-கிறதா என எச்சில் ஊறும் நாக்குடன் காத்துக் கிடக்கிறது.

தமிழ் நாட்டு முதல்வரும் திமுக தலைவரு-மான மு.க.ஸ்டாலினுக்கு மே-04 தேர்தல் முடிவில் ஏதும் கொஞ்சமாவது சறுக்கல் ஏற்படாதா? அப்படி ஏற்பட்டால், அந்தத் துரும்பைத் தூணக்கி ஸ்டாலின் அரியணை-யில் தொடர முடியாதபடி ஏதாவது தகிடுதத்த குறுநாடகத்தை வெட்கமின்றி அரங்கேற்ற-லாமே என்ற வஞ்சகத் திட்டத்துடன் காத்தி-ருப்பதற்கு சாட்சிதான், கிண்டி ஆளுநர் மாளிகை வெற்று நாற்காலியுடன் காட்சி தருவது.

தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த வேதாரண்-யம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தோற்-கும்பொழுதெல்லாம், புனித ஜார்ஜ் கோட்-டையைக் கைபற்றி ஆட்சிக்கு வரும். இதில், `1971, 1996 தேர்தல் முடிவு விலக்காகும்;

அதைப்போல, அதிமுக கோட்டையான பல்லடம் தொகுதியில் திமுக வென்றால், நிச்சயம் திமுக ஆட்சியைப் பிடிக்கும்.

நாடு விடுதலை அடைந்த சமயத்தில் பிரஜா சொசலிசக் கட்சியின் கோட்டையாக இருந்த இத்தொகுதி, பின்னர் அதிமுக-வின் வலு-வான தொகுதியாக மாறி, தற்பொழுதுவரை அந்நிலை நீடிக்கிறது. இடையில், 1962 தேர்தலில் மட்டும் ஒரேயொரு முறை காங்கி-ரஸ் வென்றிருக்கிறது. எம்ஜிஆர் தனியாக அதிமுக-வை உருவாக்கி முதல் முறையாக தெர்தலை சந்தித்த 1977 முதல் தற்பொழுது வரை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இத்தொகுதி அதிமுக வசமே உள்ளது.

1989, 1996 தேர்தல்களில் மட்டும் இங்கு திமுக வென்றுள்ளது. அந்த இரு தெர்தல்களிலும் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. இவை தவிர, 2001 முதல் கடந்த கால் நூற்றாண்டாக அதிமுக தன் இரும்புப் பிடியில் வைத்திருக்-கும் பல்லடம் தொகுதியில் இம்முறை க. செல்வராசுவை திமுக களம் இறக்கி உள்ளது.

இந்தத் தொகுதியின் நடப்பு மக்கள் பிரதி நிதி எம்.எஸ்.எம். ஆனந்தனுக்குப் பதிலாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. பரமசிவத்தை இம்முறை களமிறக்கி உள்ளார் கட்சி பொதுச் செயலர் இடைப்பாடி பழனிசாமி. 2001 தேர்தலில் வென்ற பரம சிவம் தற்பொழுது ஒரு வலுவான போட்டி-யாளராக இருப்பதால், அவரை கடுமையாக எதிர்கொள்கிறார் திமுக-வின் க.செல்வராசு.

வர்த்தக நகரான திருப்பூர், நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் அதன் முதல் மேயராக பணியாற்றியவர் க. செல்வராசு. எளிய குடும்ப பின்னணியைக் கொண்ட இவர், தற்பொழுது திமுக-வின் திருப்பூர் மாவட்டா செயலராக பொறுப்பு வகித்தாலும், தொடக்-கத்தில் பனியன் தொழிற்சாலையில் பணியாளராக இருந்தவர்.

தொடக்கத்தில் சற்று பின்னடைவை எதிர்-கொண்டாலும் தற்பொழுது மு.க. ஸ்டாலின் நிறுத்தியுள்ள க.செல்வராசுவும் புது டில்லிக்கு கப்பம் கட்டும் பழனிசாமியின் பரமசிவமும் சம வலிமையுடன் களமாடு-கின்றனர்.

எவர் வென்றாலும் சொற்ப பெரும்பான்மை-யில்தான் வெற்றி முகட்டைத் தொடமுடியும்.

அதேவேளை, கூட்டணி பலம், ஸ்டாலினின் செல்வாக்கு-சொல்வாக்கு, மக்கள் நலத் திட்டங்களால் பெண் வாக்காளர் மத்தியில் நிலவும் அதரவு ஆகியவற்றின் அடிப்படை-யில், நாளை நடைபெறும் வாக்களிப்பின் மூலம், பல்லடத்து வெற்றிக் கணியை முதல்வர் ஸ்டாலினிடம் செல்வராசு ஒப்படைப்பார் என்று குமரி நல்லாள் நம்புகிறாள்.

அவ்வண்ணம் நடந்துவிட்டால், திமுக-வின் வெற்றி, மாநில அளவில் சொல்லி அடிக்கும் விதமாக ஏகமாக இருக்கும். அவ்வெற்றி, பாஜக நெருங்க முடியாத அளவிற்கும் ஆளுநர் மாளிகைவழி நாக்பூரின் கிளை அலுவலகமான புதுடில்லி அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கும் சூழ்ச்சி வலைக்கும் அவசியமில்லாமல் போகும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை