
கோடம்பாக்கத்தையும் புனித ஜார்ஜ் கோட்டையையும் ஆண்ட எம்ஜிஆருக்கு இன்று பிறந்த நாள்.
இதன் தொடர்பில் இன்று ஜனவரி 17-ஆம் நாள், வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் தலைநகரத்து டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கில் எம்ஜிஆர் கலை விழா நடைபெற இருக்கிறது.
எஸ்.பி. மணிவாசகம் வழிநடத்தும் டெலிஸ்டார் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நான்கு வர்த்தக அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன.
ஆன்மிகத் தலைவராக இருந்தாலும் சமூகப் பார்வை உடையவரும் மெல்லிய நகைச்சுவைப் பேச்சாளரும் ஆதிசங்கரர் மடத்தின் நிறுவனருமான மகேந்திர சுவாமிகளும் இதில் கலந்துகொள்கிறார்.
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் இருந்து தத்துவப் பாடல்கள் அதிகமாக பாடப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
நுழைவு இலவசம்


