Thursday, April 30, 2026

வங்கிகள் சண்டித்தனம்! அரசு முறைப்படுத்த வேண்டும்!!

நாட்டில் உள்ள வங்கிகள், அகலக் கால் வைத்து பல்வேறு முதலீடுகளின் மூலம் பாரிய அளவில் பொருளாதார பலன் அடைந்தாலும், வங்கிகளுக்கு பொதுவாக அடிப்படை ஆதாரமாக இருப்பவர்கள் அந்தந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமே.

விடு, மனை, வாகனம் வாங்கவும், தொழில் முதலீட்டுக்காகவும் பொது மக்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது பொதுவான நடைமுறை. அத்தகைய பயனீட்டாளர்களை எந்த வங்கியாவது மதிக்கிறதா என்றால் கடுகளவும் இல்லை;

பத்து, பதினைந்து வருடங்களாக ஒருவர் ஏதொவொரு வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தான்பெற்ற கடனுக்கான தவணைப் பணத்தைச் செலுத்த தாமதம் ஏற்பட்டால், அடுத்த சில தினங்களில் குறித்த வங்கி-யிடம் இருந்து அழைப்பு வரும்.

தொலைபேசியை எடுத்தால், எடுத்துக் காட்டிற்கு அது நானாக இருந்தால், “நீ யார் நக்கீரனா? என்ற கேள்விதான் மறுமுனை-யில் ஒலிக்கும்.

மரியாதை இருக்காது; இங்கிதம், பணிவு, அணுசரனை, சராசரி மனிதப் பண்பு என எதுவும் இருக்காது. கையில் தடியோடு வந்து நேரில் மிரட்டுவதாக இருக்கும் வினாத் தொடுக்கும் தொனி. இந்த பச்சை சண்டித் தனத்தை அந்த வங்கி-இந்த வங்கி என்றின்றி, எல்லா வங்கியும் ஒருசேர கடைப்பிடிக்கின்றன.

தவணைப் பணத்தை செலுத்த ஒரு நாள் தாமதமானாலும் அதற்கு வட்டியும் வட்டிக்கு வட்டியென குட்டியும் சேர்த்து கணக்கிட்டுக் கொள்ளும் வங்கிகளுக்கு.., தவிர வாடிக்கை-யாளருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு கடி-தம், தொலைபேசி அழைப்பு என ஒவ்வொன்-றுக்கும் கணக்கிட்டு, மொத்தமாக வசூலித்-துக் கொள்ளும் வங்கிகளுக்கு வாழ்வளிக்-கும் பொதுமக்களை, குறிப்பாக வாடிக்கை-யாளர்களை மதிக்கும் பண்புநலன் அடி-யோடு அற்றுப்போனது ஏன்?

இன்னாருக்குத்தான் அழைக்கிறோம் என்று தெரிந்தபின்னும், அழைத்துவிட்டு, “நீ அவர்-தானே?” என வினவுவது படுமுட்டாள்தன-மானது; போக்கிரித்தனமானது. வங்கிகள் புரியும் கேடுகெட்டத்தனம்.

அதைக் கடந்து, ஆமாம், நான் நக்கீரன்தான் என பதிலளித்துவிட்டு, நீங்கள் யார் என்-றால், “நான் வங்கியிலிருந்து பேசுகிறேன்” என்று பதில்வரும்.

வங்கி என்பது கட்டடம்; அதில் சுவர், கூரை, மேசை, நாற்காலி, குளிர்சாதன இயந்திரம் உள்ளிட்ட சாதனங்கள்தான் இருக்கும்.

“நான் அதைக்கேட்கவில்லை; உங்களின் பெயரைக் கேட்டேன்” என்று வாடிக்கையாளர் தொடர்ந்தால் அப்பொழுதும் அந்த தடித்தன பிறவி, “நான் கடன்வசூலிக்கும் பிரிவில் இருந்து அழைக்கிறேன்” என்று சண்டித்-தனத்தைத் தொடரும்.

சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து அழைக்-கும் பணியாளருக்குத் தெரியும் யாருக்கு அழைக்கப்போகிறோம் என்று; அப்படி-யாயின், “வணக்கம்; நான் அஸ்மா, இந்த வங்கியில் இருந்து அழைக்கிறேன்” என்று (உதாரணத்திற்கு) அறிமுகப்படுத்திக் கொண்டால், அந்த வங்கி என்ன இடிந்தா விழுந்துவிடும்?

வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்-கும் ஒவ்வொரு வகையான ஏற்ற-இறக்கம்; பொருளியல் நெருக்கடி இருக்கலாம். ஒரு வாடிக்கையாளர் தவணைப் பணத்தை செலுத்தவில்லை என்றால்,

சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, நினைவுறுத்தலாம்; அல்லது தவணைப் பணத்தைச் செலுத்தும்படி நேரில் அறிவுறுத்தலாம். அந்த வேளையில், சற்று அன்பாகவும் கனிவாகவும் ஆதரவாகவும் பேசினால், இன்னலுற்ற நிலையில் இருக்கும் ஒரு வாடிக்கையாளருக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

இதையெல்லாம் விடுத்து, தெரிந்தே ஒருவரை அழைத்துவிட்டு, “நீதானே அவர்?” என வினவும் ஒரு பிறவி, கண்டிப்பக ஒரு விலங்காக இருக்க வாய்ப்பில்லை; மனிதனாக இருந்தால், அது(?), சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டால், அதன் தலை முதுகுப்பக்கம் திரும்பிவிடுமா என்ன?

சிரமத்தில் இருக்கும் வாடிக்கையாளரை வதைக்கும் வங்கிகளின் இந்த அராஜகத்தனத்தை மாற்றிக் கொள்ளும்படி அரச சார்பில் அறிவுறுத்தப்பட வேண்டும்.

வாடிக்கையாளரின் உரிமைகள்
• மரியாதை: வங்கியுடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
• தகவல் அறியும் உரிமை: கடன், வட்டி, கட்டணங்கள் போன்ற அனைத்தையும் தெளிவாக அறிய உரிமை உண்டு.
• தனியுரிமை: வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
• நியாயமான சேவை: கடன் வசூல், தவணை நினைவூட்டல் போன்றவை அன்பும் பணிவும் கொண்ட முறையில் செய்யப்பட வேண்டும்.
வங்கிகளின் பொறுப்புகள்
• தெளிவான தகவல்: ஒவ்வொரு சேவைக்கும் தெளிவான விதிமுறைகள், கட்டணங்கள், வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
• நியாயமான வசூல்: வாடிக்கையாளர்களை மிரட்டாமல், அன்பாக நினைவூட்ட வேண்டும்.
• பாதுகாப்பு: வாடிக்கையாளர்களின் பணமும, தகவல்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
• சமூகப் பொறுப்பு: வங்கிகள் வாடிக்கையாளர்களின் நெருக்கடியை புரிந்து, அவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை