
தென்கிழக்கு ஆசியாவில் தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோக வர்த்தகத்தில் முன்னிலை நிறுவனங்களில் ஒன்றான பப்ளிக் கோல்டு, 2025/26 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில்முனைவோர்களை கௌரவிக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவிலான Award Recognition Night (ARN) 2026 விருது வழங்கும் விழாவை, மலேசிய பன்னாட்டு வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) பிரம்மாண்டமாக நடத்தியது.
“One Team, Endless Records, Legacy Continues” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் 3,200-க்கும் மேற்பட்ட Public Gold Business Owners (PGBOs) பங்கேற்றனர்.
இந்த விழாவில் பப்ளிக் கோல்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டத்தோஸ்ரீ லூயிஸ் ங் மற்றும் Aurora Italia International Berhad நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தின் ஸ்ரீ இவோன் லிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2008-ஆம் ஆண்டு பினாங்கில் தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்டு, தற்போது மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு, உலகளவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.
2025/26 நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை வெ.27 பில்லியனைக் கடந்துள்ளது.
மேலும், தகுதி பெற்ற தொழில்முனைவோருக்கு RM490 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிறுவனம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாயில் 161 தங்க ஏடிஎம்களை (Gold ATM) நிறுவியதற்காக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கின்னஸ் உலகச் சாதனை அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் ARN விழாவில் 24-க்கும் மேற்பட்ட விருது பிரிவுகளில் மொத்தம் 1,422 சிறந்த தொழில்முனைவோர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை வெ.30.98 மில்லியன் ஆகும்.

கடந்த நிதியாண்டில் 780 பேருக்கு வழங்கப்பட்ட வெ.15.81 மில்லியன் பரிசுத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகமாகும்.
விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Million Star Triple Diamonds விருதைப் பெற்ற துவான் ஹாஜி ஸுல்கிப்லி பின் ஷாஃபி மற்றும் புவான் ஹாஜா நஜ்டா பிந்தி முகமது ஹுசைன் ஆகியோர், சிறந்த தலைமைத்துவம் மற்றும் வணிக சாதனைகளுக்காக மொத்தம் வெ.2.27 மில்லியன் நிதி வெகுமதியைப் பெற்றனர்.
மேலும், கடந்த 18 ஆண்டுகளாக வலுவான வணிக வலையமைப்பை உருவாக்கிய Million Star Double Diamond Mahagurus விருதைப் பெற்ற துவான் சியுகோர் ஹாஷிம் மற்றும் புவான் ஜோனைனா நூர்டின் ஆகியோர் வெ.1.03 மில்லியன் வெகுமதியைப் பெற்றனர்.
அதேவேளை, Public Gold Leadership Seminar (PGLS) 2026 தலைமைத்துவப் பயிற்சி திட்டத்திற்கு தகுதி பெற்ற 949 தொழில்முனைவோரும் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் மற்றும் இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரங்களில் நடைபெறும் வெளிநாட்டு தலைமைத்துவ பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக நிறுவனம் இதுவரை வெ22 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சமாக, உலகளவில் 1,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்படும் ஒரு அவுன்ஸ் 999.9 தூய தங்கத்தில் உருவாக்கப்பட்ட Malayan Tiger Gold Coin அறிமுகப்படுத்தப்பட்டது.
மலேசியாவின் தேசிய அடையாளமான மலாயன் புலியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாணயம், வலிமை, தைரியம் மற்றும் நீடித்த செழிப்பைக் குறிக்கிறது.
விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ லூயிஸ் ங், “பப்ளிக் கோல்டின் ஒவ்வொரு சாதனையும் எங்கள் தொழில்முனைவோர், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளிகளின் அர்ப்பணிப்பின் பலனாகும். ‘ஒரே அணி’ என்ற ஒற்றுமையுடன் நாம் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து, நம் வர்த்தக பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்வோம்,” என்றார்.
2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 1 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் இலக்குடன், கல்வி, தொழில்நுட்ப புதுமை மற்றும் மூலோபாய கூட்டாண்மை துணையுடன் மலேசியாவிலும் பிராந்திய அளவிலும் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த பப்ளிக் கோல்டு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


