Friday, May 1, 2026

சைவ உணவக மன்னன் சரவணபவன்! -107ஆவது கிளை நேற்று திறப்பு!!

சைவ உணவிற்கு உலக அளவில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகக் குழுமத்தின் நூற்று ஏழாவது கிளை நேற்று கோலாலம்பூர் ஈப்போ சாலை (ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா) ரிவர் சிட்டி பகுதியில் கோலாகலமாக திறப்பு விழா கண்டது.

தமிழ்நாடு-இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, வளைகுடா நாடுகள், ஜப்பான் என முப்பது நாடுகளில் 106 கிளைகளைக் கொண்டு உணவக ஜாம்பவானாகத் திகழும் சரவண பவன், நேற்று இன்னொரு கிளையை திறந்து அதிரடி படைத்துள்ளது.

அரசப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப்போல கட்சி பொறுப்பு வகித்தாலும் வகிக்காவிட்டாலும் மலேசிய இந்திய சமுதாயத்தில் எந்நாளும் செல்வாக்குடன் திகழும் டத்தோ த. மோகன் தலைமையில் இந்த உணவகம் நேற்று முன்னிரரவில் திறப்பு விழா கண்டது.

“முதலாளியோ தொழிலாளியோ ஏழையோ பணக்காரரோ சிறியவரோ பெரியவரோ எவராக இருந்தாலும் வயிற்றுக்கு உணவு வேண்டும்.; அந்த வகையில் தரமான சைவ உணவுக்கு உலக அளவில் புகழ் பெற்ற சரவண பவன் புதிதாக இன்னொரு கிளையை ஈப்போ சாலை வட்டாரத்தில் திறந்து இருப்பது பாராட்டுக்குரியது; சரவணபவன் உணவகத்தின் சுவைமிகு உணவுப் பண்டங்களைப் பற்றி புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை; ஊரும் உலகம் அறிந்தது;

எல்லா சமயத்தினரும் எல்லா மொழியினரும் அனைத்து பண்பாட்டு மக்களும் குறிப்பாக எல்லா பருவத்தினரும் விரும்பி உண்ணும் சைவ உணவிற்கு புகழ்பெற்ற சரவணபவன் குழுமத்தின் இன்னொரு கிளை இங்கே திறக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. அனைவரும் இந்த புதிய சரவணபவன் உணவகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்த உணவகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன் தெரிவித்தார்.

இந்த உணவகத்தை திறந்து வைப்பதற்காக வருகை புரிந்த டத்தோ மோகன் தம்பதி-யருக்கு, முன்னதாக மேளதாளத்துடன் வரவேற்பு நல்கப்பட்டது

கோலாலம்பூர் பினாங்கு உள்ளிட்ட இடங்க-ளில் ஏற்கனவே ஆறு கிளைகளைக் கொண்-டிருக்கும் சரவணபவன் ஏழாவது கிளையாக இந்த உணவகத்தை திறப்பதாக சரவண பவன் உணவக குழுமத்தின் மேலாண்மை இயக்குனரும் தலைமை நிர்வாகியுமான சிவக்குமார் தெரிவித்தார்.

ஆலயங்கள் சூழ்ந்து இருக்கும் இந்தப் பகுதியில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற உணவகமாக இது திகழும் என்று உறுதி அளித்த சிவக்குமார் அனைவரும் இந்த உணவகத்திற்கு ஆதரவளித்து துணை நிற்கும்படி கேட்டுக் கொண்டார்.

ஜோ சரவணன் உள்ளிட்ட வர்த்தக பிரமுகர்-களும் ஏராளமான தொழில் முனைவோரும் இனம் கடந்து- மொழி கடந்த பொதுமக்களும் இந்த தொடக்க விழாவில் திரளாக கலந்து கொண்டு சுவையான உணவை உண்டு மகிழ்ந்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை