
கூட்டரசுப் பிரதேசத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் குற்றமற்ற தலை-முறையை உருவாக்கும் கருத்தரங்கு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ்ப்பள்ளி மாணவ சமுதாயத்தில் குற்ற-மற்ற தலைமுறையை உருவாக்கும் இலக்-கில் காவல் துறையுடன் மஇகா பணிப்படை-யும் இணைந்து இந்த நிகழ்ச்சியை இன்று நடத்தின.
நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தொடர்பான பகடிவதை, வன்முறை, போதைப் பொருள் பயனீடு உள்ளிட்ட குற்றங்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளவும் இத்தகைய குற்ற நடவடிக்கைக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ளவும் விழிப்புணர்வு ஊக்கமும் அளிக்கும் வகையில் இக்கருத்தர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் மஇகாவின் பணிப்படை இன்று மிகப்பெரிய அளவில் இந்தகா கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

Maju Institute Of Educational Development (MIED) ஏற்பாட்டில் குற்றமற்ற தலைமுறைக் கருத்-தரங்கின் நிறைவு விழாவிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.ஏ.விக்-னேஸ்வரன் சிறப்பு வருகை புரிந்தார
கோலாலம்பூர் ஜாலான் செமாராக் போலீஸ் பயிற்சி அகத்து மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
Bridget Mic ஆண்ட்ரூ டேவிட் நிகழ்ச்சி இயக்குநராக இருந்து கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.
அரச மலேசிய காவல் துறை, கல்வி அமைச்சு
விலாயா பெர்செகுத்துவான் மற்றும் கல்வித் துறை ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டரசுப் பிரதேச காவல் துறை துணை தலைவர் Dato Mohd Hasani உட்பட காவல் துறை அதிகாரிகள் பெரும் அளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


