
கிள்ளானில் பிரபல ஆடையகமாக நீண்ட காலமாக விளங்கும் சென்னை சில்க் பேலஸ் நிறுவனம் அறிவித்துள்ள அதிர்ஷ்டக்காரை வெல்லப்போவது யார் என்னும் பேச்சும் எதிர்பார்ப்பும் கிள்ளான் அரச நகரை தற்பொழுது ஆக்கிரமித்துள்ளது.
கிள்ளானிலும் சுற்று வட்டாரங்களிலும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள சென்னை சில்க் பேலஸ், 20-ம் ஆண்டு எட்டியதையொட்டி இந்த அதிர்ஷ்ட குலுக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே முறையில் 500 வெள்ளிக்கு மேல் கொள்முதல் செய்யும் அனைவரும் இந்த அதிர்ஷ்டப் போட்டியில் கலந்து கொண்டு விலை உயர்ந்த பொருட்களை வெல்லும் பொன்னான வாய்ப்புகளைப் பெற இருக்கின்றனர்.
பெரோடுவா கார், தரமான ஸ்கூட்டர் உள்ளிட்ட ஏராளமான விலை உயர்ந்த பொருட்களை உள்ளடக்கிய இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் அதிர்ஷ்ட வாய்ப்பை பரிசோதிக்கும் படி கிள்ளான் சென்னை சில்க்ஸ் பேலஸின் நிறுவனரும் உரிமையாளருமான வி. தனசேகரனின் மகன் கோட்டீஸ்வரன் கேட்டுக் கொள்கிறார்.

இந்த அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியை மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா முன்னாள் உதவி தலைவர்களில் ஒருவரும் மேநாள் செனட்டருமான டத்தோ த. மோகன் இன்று தொடக்கி வைத்தார்.
இந்த அதிர்ஷ்ட குலுக்கலின் முடிவுகள் வரும் நவம்பர் திங்கள் 15ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று கோட்டீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.


