Saturday, May 2, 2026

சமூக மையமாகத் திகழும் பாங்கி லாமா மாரியம்மன் ஆலயம்! -டத்தோ மோகன் புகழாரம்

பாங்கி லாமாவில் நீண்ட காலமாக வட்டார மக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்ற அருள்மிகு மாரியம்மன் ஆலயம், ஓர் ஆன்மீக மையமாக மட்டும் அல்லாமல் சுற்று வட்டார மக்களின் பண்பாட்டு கலாச்சார கல்வி பொருளாதாரக் கூறுகள் சார்ந்த சமூக மையமாகவும் திகழ்கிறது என்று அரசியல் வல்லாரும் தொழில் முனைவோருமான டத்தோ த. மோகன் தெரிவித்தார்.

இந்த ஆலயத்தில் நேற்று மே தின விழாவும் 66 ஆம் ஆண்டு பேருற்சவ விழாவும் ஒன்றாக நடைபெற்றன.

இந்த விழாவில் பிற்பகலில் கலந்து கொண்ட டத்தோ மோகன்-டத்தின் லோகேஸ்வரி இணையர் அதிர்ஷ்ட குலுக்கலை கலகலப்பாக நடத்தி ஆலயத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் பொதுமக்களிடையே உற்சாகத்தையும் கலகலப்பையும் ஏற்படுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ மோகன், இந்த ஆலயத்தை ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக வழிநடத்தி வருகின்ற பன்னீர்செல்வம் மற்றும் அவரின் தலைமையிலான குழுவினர் ஆலயத்தை சீராகவும் செம்மையாகவும் பராமரித்துவ
ரும் அதேவேளை சுற்றுப்புற தோட்ட மக்களிடம் இணக்கமாகவும் அணுசரனையாகவும் செயல்படுகின்ற பாங்கு பாராட்டிற்குரியது என்றார்.

ஆலய நிருவாகம் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இசைவாக நடந்து கொள்வதைப் போல பொதுமக்களும் ஆலய நிருவாகத்தின் கு ஆதரவாக செயல்படுவதை நீண்ட காலமாக கண்டு வருவதாகக் தெரிவித்த அவர், அண்மைக்காலமாக இந்த ஆலயம் ஒரு சில தடங்கலை எதிர்கொண்டு வருவதாகவும் ஆனாலும் அதற்கெல்லாம் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

ஒரு மண்டபத்தை எழுப்ப வேண்டும் என்ற இலக்கை நீண்ட காலமாக கொண்டிருக்கும் இந்த ஆலய நிர்வாகத்தின் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல அன்னை மாரியம்மன் துணை இருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை