Monday, May 4, 2026

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பும் மும்மொழிக் கொள்கையும் அமல்! -பாஜக மறைமுக ஆட்சி!!

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கும் தமிழ்நாடு இணைந்திருந்த சென்னை மாகாண சட்டமன்றத்திற்கும் தொங்கு சட்ட சபை என்பது புதிதல்ல; ஆனாலும் அண்மைக்கால வரலாற்றில் இது புதியதுதான்.

கடந்த ஏப்ரல் மாதம் இருபத்தி மூன்றாம் நாள் தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாடு நிலையான ஆட்சியை இழக்கிறது. பாஜகவின் அம்பு விஜயின் த.வெ.க. கட்சியும் பாஜக அடிமை அதிமுகவும் இணைந்து அமைக்க இருக்கின்ற கூட்டணி ஆட்சியில், உண்மையான அதிகாரம் மோடியிடமும் அமித்ஷாவிடமும் தான் இருக்கும்.

தமிழ்நாடு கூடிய விரைவில் நிறம் மாறி போகும்; இந்தித் திணிப்பும் மும்மொழி கொள்கையும் இடம்பெறும்.

ஆனாலும் நல்லாட்சி நடத்தி வந்த மு.க. ஸ்டாலின் நிருவாகத்தில் சில குறைபாடுகள், பின்னடைவு இருந்ததெல்லாம் உண்மைதான்;

ஆனாலும் இந்த அளவிற்கு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றால் இதில் ஏதோ ஒரு சூதும் சூழ்ச்சியும் பொதிந்து இருக்கிறது.

பாஜகவின் கிளை அலுவலகத்தைப் போல மாறிவிட்ட தேர்தல் ஆணையமும் தேர்தல் ஆணையம் கையாளுகின்ற தேர்தல் இயந்திரமும் ஏதோ ஒரு வலை பின்னி இருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.

இன்றைய தேர்தல் முடிவை, தந்தி டிவி குதூகலித்து கொண்டாடி அறிவிப்பு செய்து வருகிறது

காலம் பதில் சொல்லட்டும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை