Friday, May 15, 2026

PPR வீட்டு வாடகை பாக்கியை கட்டுவதற்கு கால அவகாசம் கொடுங்கள்! -டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள்!

கோலாலம்பூர் மே 15-
வருமானம் பாதிப்பால் பிபிஆர் வீடுகளில் குடியிருக்கும் வசதி குறைந்த மக்கள் தங்களது வாடகை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் வீட்டு வாடகை பணத்தை செலுத்தவில்லை.

இந்த வாடகை கட்டணம் பல லட்சத்தை எட்டி உள்ளது என்பதை மறக்க முடியாது.

இதனால் இவர்களின் வீடுகள் பூட்டப்படும் உள்ளதால் சம்பந்தப்பட்ட மக்கள் பெரும் சுமையை எதிர்நோக்க நேரிடலாம்.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் படிப்படியாக பாக்கி கட்டணத்தை செலுத்த டிபிகேஎல் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உதாரணமாக ஒருவர் 5,000 வெள்ளி கட்டண கடன் பாக்கி வைத்திருப்பவர் முதலில் 25 விழுக்காடு பாக்கி கட்டணத்தை செலுத்த வாய்ப்பளிக்க வேண்டும்

மேலும் அவர் மாதம் மாதம் தங்களது வாடகை கட்டணத்தோடு கூடுதல் கட்டணத்தை கட்ட பரிசீலனை செய்ய வேண்டும்

இதன் வழி பாக்கி கட்டண பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு பிறக்கும்.

இது தொடர்பாக டத்தோ பண்டாருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். இதை பரிசீலிப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இந்த தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கிட விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தலைமையிலான பிபிபி தொகுதி தலைவர்கள் மற்றும் மகளிர்கள் களம் இறங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

பாக்கி கட்டண விவகாரத்தில் அனைத்து இனத்தவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இனம் மதம் மொழி பார்க்காமல் பிபிபி கட்சி எப்போதும் வசதி குறைந்த மக்களுக்கு அரணாக இருக்கும் என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

செய்தி: செ. வே. மு. மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை