Saturday, September 19, 2026

கிரேக்க-பாரசீக போரும் மராத்தோன் ஓட்டமும்!

மாந்த குல நாகரிகத்தில் தொட்டிலாக இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்ற கிரேக்க தேசத்திற்கும் அத்தகைய வரலாற்று பூமியின்மீது ஆதிக்கம் செலுத்த விரும்பிய பாரசீகத்திற்கும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடைபெற்ற போருக்கும் இன்று உலக அளவில் விளையாட்டு துறைக்கு பரிச்சயமான மராத்தோன் ஓட்டத்திற்கும் என்ன தொடர்பு?

கிரேக்க தேசத்து மாரத்தோன் மாநகரில் நடைபெற்ற போரின் வரலாற்றுப் பின்னணியில்தான் இன்று மராத்தோன் போட்டியும் அழைக்கப்படுகிறது.

இந்தப் போர் உண்மையில் கிரகத்தில் விளைந்த வீரத்தின் அடையாளமாகும்

கி.மு. 490-இல், கிரேக்கத்தின் சுதந்திரம் ஆபத்தில் இருந்தது. அப்பொழுது உலக அளவில் வலிமையாக இருந்த பாரசீகப் பேரரசு, தனது ஆட்சியை விரிவுபடுத்தும் நோக்கில், கிரேக்கத்து ஏதென்ஸ் நகரத்தைக் கைப்பற்ற முயன்றது.

அந்த நேரத்தில், மாரத்தோன் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், சிறிய கிரேக்க படை, மிகப் பெரிய பாரசீக இராணுவத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

இந்த வெற்றி, கிரேக்கர்களுக்கு அரசியல் சுதந்திரத்தையும், கலாச்சார-பண்பாட்டு அடையாளத்தையும் காப்பாற்றியது. மாரத்தான் போரின் மூலம், “சிறிய தேசம் கூட தன்னம்பிக்கையுடன் போராடினால், பெரிய பேரரசை தோற்கடிக்க முடியும்” என்ற செய்தி உலக வரலாற்றில் பதிந்தது.

அந்தப் போரில் வெற்றி செய்தியை ஏதென்ஸ் நகரத்து அரசு பீடத்திற்கு தெரிவிக்க படைவீரர்களில் ஒருவர் விரும்பினார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில், போரில் ஈடுபட்டு கடுமையான களைப்பில் இருந்தாலும் சொந்த நாட்டின் வெற்றிச் செய்தியை நகர மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் தெரிவிக்க ஓடோடி வந்தான் அந்தப் போர் மறவன்.
அந்த போர் வீரனின் பெயர் பிடிப்பிட்சு.

வலிமைமிக்க பாரசீக படையை எதிர்த்து வெற்றி பெற்ற செய்தியை ஏதென்ஸ் மக்களிடம் தெரிவிக்க, பிடிப்பிட்சு என்ற வீரன், மாரத்தானிலிருந்து ஏதென்ஸ் வரை ஏறக்குறைய 40 கிலோமீட்டர் தூரம் ஓடினார்.

அவர் நகரை அடைந்த அடுத்த நொடி, “நாம் வெற்றி பெற்றோம்!” என்று ஏதேன்ஸ் நகர எல்லையில் அறிவித்தார்.

அவ்வாறு அறிவித்த அடுத்த நிமிடமே தரையில் சரிந்து விழுந்த பிடிப்பிட்ஸ் அப்படியே உயிரிழந்தார் என்று வரலாறு கூறுகிறது.

போரில் ஈடுபட்டு கலைப்புற்றிருந்த நிலையிலும், அதை புல்ப்படுத்தாமல் புறந்தள்ளி சொந்த நாட்டின் வெற்றிச் செய்தியை தெரிவிப்பதற்காக ஓடிவந்த பிடிப்பிடிசின் இந்த வீரச் செயல்தான், பின்னாளில் மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு அடிப்படையாக அமைந்தது.

இன்று உலகம் முழுவதும் நடைபெறும் மாரத்தான் போட்டிகள், அந்த வீரனின் தியாகத்தையும், கிரேக்கத்தின் சுதந்திரப் போராட்டத்தையும் நினைவூட்டுகின்றன.

மாரத்தான் போர், கிரேக்க ஜனநாயகத்தின் அடித்தளத்தை உறுதிப்படுத்திய
அதேவேளை, பாரசீகப் பேரரசின் ஆதிக்க போக்கும் தடுக்கப்பட்டது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை