Monday, August 3, 2026

ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவும் மனப்பான்மையை தொழிலதிபர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்! -பிஎம்ஜிஆர். நேவிஷ்குமார் வலியுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13-
நாட்டிலுள்ள தொழிலதிபர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் நலிவடைந்த மக்களுக்கு உதவும் பணிகளில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என பெஞ்மார்க் (Benchmark Property & Facility) நிறுவனத்தின் உரிமையாளர் பிஎம்ஜிஆர்.நேவிஷ் குமார் வலியுறுத்தினார்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலதிபர்கள், தங்களின வருமானத்தில் ஒரு பகுதியை சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்குவதன் மூலம் பல ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக ஆதரவற்ற இல்லங்களுக்கு நிதியுதவி, கல்வி உதவி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள், அங்குள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு பள்ளின சமூகத்தினரிடையே நல்லிணக்கத்-தையும் வலுப்படுத்தும் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் இன்று பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் உள்ள தாமான் மேடான் ஆதரவற்றோர் இல்லத்தில் நேவிஷ் குமார் நேசக்கரம் நீட்டினார்.

ஆதரவற்ற சிறாரும் தனித்து வாழும் பெண்களும் அடைக்கலம் நாடி உள்ள இந்த இல்லத்தில் இன்று சனிக்கிழமை அனைவருக்-கும் பகல் உணவு அளித்ததுடன் பண அன்பளிப்பும் செய்தார்.

முன்னதாக அனைவரையும் கவரும் வண்ணம் விளையாட்டு நிகழ்ச்சியும் சொல் புதிர் போட்டியும் இடம் பெற்ற பொழுது அனைவரும் ஆர்வத்துடன் கலந்து மகிழ்ந்தனர்.

நேவிஷ்குமார் தன் குடும்ப உறுப்பினர்கள், நிறுவனப் பணியாளர்கள் ஆகியோருடன் வருகை தந்து நலிந்த நிலையில் உள்ள இந்த மக்களுக்கு நேசக்கரம் நீட்டியது உள்ளத்தை வருடுவதாக இருந்தது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை