
கோலாலம்பூர் ஜூன் 14-
இன்னும் ஈராண்டுகளில் நூற்றாண்டை எட்ட இருக்கின்ற இந்திய வர்த்தக அமைப்பு கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கம். இத்தகைய வரலாற்றைக் கொண்ட பாரம்பரிய இந்திய வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக வி.கே.கே. இராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.
இன்று நடைபெற்ற தேர்தலில் இவருக்கு 155 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட பிரபாகரன் வைத்தியலிங்கத்திற்கு 148 வாக்குகள் கிடைத்தன. வெறும் ஏழே வாக்கு-களில் இந்த பாரம்பரிய வர்த்தக சங்கத் தலைமையை கைப்பற்றினார் வி கே கே இராஜசேகரன்.
இவருடைய அணியில் துணைத் தலைவருக்கு போட்டியிட்ட வலிமையான வேட்பாளராகக் கருதப்பட்டவர் பன்னீர்செல்வம். இருந்த போதும் மலேசிய இந்திய உலோக மறுசுழற்சி சங்கத்தின் பொருளாளருமான பன்னீர் செல்வம் துணைத் தலைவர் பதவி தேர்தலில் வை பிரபாகரன் தலைமையிலான எதிரணி-யைச் சேர்ந்த மோகனா சின்னத்தம்பியிடம் தோல்வி அடைந்தார்.
சி. மோகனா, 166 வாக்குகளைப் பெற்ற வேளையில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீருக்கு 137 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
உதவித் தலைவர் தேர்தலில் டாக்டர் சித்ரா தேவி வெற்றி பெற்றார். இவருக்கு 153 வாக்குகள் கிடைத்தன. பிரபாகரன் அணி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட கவிமாறன் என்ற குமரன் முனியாண்டிக்கு 149 வாக்குகள் கிடைத்தன.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐ.ஆர். பிரபாகரனுக்கு 158 வாக்குகள் கிடைத்தத வேளையில், எதிர்த்து போட்டியிட்ட சண்முக செல்விக்கு 144 வாக்குககள் கிடைத்தன.

மொத்தம் 14 பேர் கொண்ட கவுன்சிலர் தேர்தலில் குமரகுரு 203 , பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம் 172, டாக்டர் ராஜசேகரன் மோகன் 171, குளோரி 168, டத்தோ கணேஷ் 167, ஜெயா 166, டாக்டர் புவனேஸ்வரி 164, ராம்குமார் 163, டத்தோ சந்திரசேகரன் 162, டாக்டர் நெடுஞ்செழியன் 161, டோனி கிளிபெர்ட் 161, டாக்டர் செல்வராஜூ 159, வர்மன் கந்தசாமி 157, குட்டி கிருஷ்ணன் மாதவன் 154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வி கே கே ராஜசேகரன் அணியில் துணைத் தலைவரைத் தவிர மற்ற அனைவரும் அவரின் அணி சார்பில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


