Thursday, July 30, 2026

சிக்கலான நேரத்தில் டத்தோ ராமலிங்கம் உதவிக்கரம் நீட்டினார்!

பி.பி.ஆர். வீடு கிடைக்க கோலாலம்பூர் மாநகர மன்றத்திடம் விண்ணப்பம் செய்த நிலையில் அவருக்கு கடந்த ஜூன் 15ஆம் நாள் ‘இந்தான் பைடுரி’வட்டாரத்தில் பி.பி.ஆர். வாடகை வீடு மாதம் 124 வெள்ளிக்கு கிடைத்துள்ளது.

ஆனால் 14 நாட்களுக்குள் அவர் வீட்டுக்கான முன் பணத்தை கட்டிவிட்டு, வீட்டு சாவியை எடுக்க வேண்டும் என கோலாலம்பூர் மாநகர மன்றம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொருளாதார சிக்கல் காரணமாக நந்தகுமார் மாநகர மன்றத்தின் கடிதத்திற்கு 14 நாட்களில் பதில் கொடுக்காத நிலையில் அவருக்கு கொடுக்க பட்ட வாய்ப்பு பறிக்கப்பட்டு மற்ற விண்ணப்பதாரர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதாரண தொழிலாளியான பி 40 பிரிவைச் சேர்ந்த நந்தகுமாரால் மாத இறுதியான இத்தருணத்தில் அந்தப் பணத்தை திரட்ட இயலாத நிலையில் தவித்தபோது, அவர் ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஏ. கே. ராமலிங்கத்தை நேற்றைய முன்தினம் சந்தித்தார்.

மாதம் முடிய இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலை நிலவரத்தை டத்தோ ராமலிங்கத்திடம் அவர் விளக்ககினார். உடனடியாக அவருக்கு தேவையான முன் பணத்தை டத்தோ ராமலிங்கம் வழங்கி அந்த வீடு அவருக்கு கிடைக்க உதவி செய்தார்.

தவித்த நேரத்தில் டத்தோ ஏ.கே. ராமலிங்கத்தை சந்தித்தேன். ம.இ.கா எனக்கு கை கொடுத்தது என நந்தகுமார் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை