Saturday, October 31, 2026

ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஜெமெந்தா தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக பிபிபி சிலாங்கூர் கிளை தீவிர பிரச்சாரம்!

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக பிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.

பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் உட்பட அனைத்து முக்கியத் தலைவர்களும் ஜோகூரில் முகாமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஜொகூர் ஜெமெந்தா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள மசீச வேட்பாளர் சீ ஆன் கியாப்-ற்கு ஆதரவாக பிபிபி சிலாங்கூர் மாநிலக் கிளையினர்
கடுமையாக உழைத்துவருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

“வேட்புமனுதா தாக்கல் முடிந்த கையோடு இதுநாள் வரை நாங்கள் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறோம்” .

தேசிய முன்னணி வெற்றிக்கு தன்னலம் கருதாமல் பிபிபி கட்சி உழைத்து வருகிறது என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை