
புரட்சி இயக்கத்தின் தேசிய மாநாடு குறித்து அதன் தலைவர் உமா காந்தன் இன்று அறிவித்தார்.
நிகழும் ஜூலைத் திங்கள் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் மாநாடு முழு நாள் நிகழ்வாக மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உமாகாந்தன் தெரிவித்தார்.
இந்த அரசியல் மாநாட்டில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம்; குறிப்பாக யாரையும் ஒதுக்காமல் தாங்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம் என்றார்.

இந்திய சமுதாயத்தில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற இனத்தவர்கள் மத்தியில் அரசியல் ஒற்றுமையை காண முடிகிறது. அவர்கள் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் இனம் என்ற புள்ளியில் ஒன்றாக இணைகின்றனர்.
அதே ஒற்றுமைக் கட்டமைப்பை இந்தியர் மத்தியிலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த அரசியல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இனம் மதம் சமயம், மொழி, கல்வி உட்பட பல விவகாரங்கள் தலைதூக்கும் போது அந்தந்த அரசியல் அமைப்புக்கள் குரல் கொடுக்கின்றன.
இந்தக் குரல் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் ஒருமித்த குரலாக இருக்க வேண்டும் என்பதே புரட்சி இயக்கத்தின் இலக்கு என்று அவர் சொன்னார்.
“புரட்சி இயக்கத்தின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு இந்த அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்”.
இந்த மாநாட்டில் விளையாட்டு குறிப்பாக கபடி, கல்வி, சமயம், பண்பாடு- கலாச்சாரம், அரசியல், கலை- இசை உள்ளிட்ட பத்து துறைகளைச் சார்ந்த பத்து சாதனையாள ர்களுக்கு சிறப்பு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
முழு நாள் நிகழ்வாக நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்வில் காலை சிற்றுண்டி பகல் உணவு மாலை தேநீர் உபசரிப்புடன் ஏறக்குறைய 1500 பேர் ஒன்று கூடலுடன் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது என்றும்
உமா கந்தன் அறிவித்தார்.
புரட்சி இயக்கத்தின் துணைத் தலைவர் கு.சித்தார்த்தன், மகளிர் தலைவி சுகந்தி மோகன், இளைஞர் பிரிவு தலைவர்
ஜீவா சுப்பிரமணியம், கிஷோர் சுரேஷ்
சேரிஷ் கணேசன் ஆகியோரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


