Tuesday, July 28, 2026

1MDB-யை அரசியல் ஆயுதமாக்குவதை நிறுத்துங்கள்!ஜொகூர் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லுங்கள்! – டத்தோ சிவராஜ் சந்திரன்

டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தற்போது சிறையில் இருக்கும் நிலையில், தொடர்ந்து 1MDB விவகாரத்தை ஜொகூர் மாநிலத் தேர்தலுடன் இணைத்து சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்வது ஏன்?

அன்மையில் சமுக வலைத்தளத்தில் நம்பிக்கை கூட்டணி தலைவர் 1MDB குறித்து பதிவை கண்டித்து ம.இ.கா முன்னால் தேசிய உதவித் தலைவர் சிவராஜ் சந்திரன் குரல் எழுப்பினார்.

2022 முதல் ஆட்சியில் இருக்கும் நீங்கள், ஜொகூர் மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்பதையே தேர்தல் களத்தில் எடுத்துரைக்க வேண்டும். அதைவிடுத்து, கடந்த கால விவகாரங்களையே மீண்டும் மீண்டும் பேசுவது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

மத்திய அரசை அமைக்க பாரிசான் நேஷனலின் ஆதரவை நாடியபோது உங்கள் அரசியல் ஒழுக்கமும் மனசாட்சியும் எங்கே சென்றது?

1MDB குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நீங்கள், அதன் முழுமையான அறிக்கையையும் நிதி விவரங்களையும் உண்மையாக ஆய்வு செய்துள்ளீர்களா? 1MDB-யின் நிகர லாபம் தொடர்பான தகவல்களைப் பார்த்துள்ளீர்களா?

கடந்த மூன்று ஆண்டுகளில் 1MDB-யை விட பெரிய பல சர்ச்சைகளும் பிரச்சினைகளும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதையும் மக்கள் மறந்துவிடவில்லை.

எனவே, ஜொகூர் மக்களை அச்சுறுத்தும் பழைய விவகாரங்களை அல்ல, அவர்களின் எதிர்கால நலனுக்கான உங்கள் திட்டங்களையும் சாதனைகளையும் முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ளுமாறு சிவராஜ் வலியுறுத்தினார்.

செய்தி: இ. காளிதாசன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை