Friday, September 18, 2026

இந்து சங்க தலைவராகத் தொடர்கிறார் தங்க கணேசன்!

மலேசிய இந்து சங்கத்தின் நடப்பு தேசியத் தலைவர் தங்க கணேசன், அப்பொறுப்பில் நீடிக்கிறார்.

மலேசிய இந்து சமுதாயத்தின் இந்த பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய சங்கத்தின் 49-ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பெட்டாளிங் ஜெயா, பண்டார் சன்வே அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் தலைவர் தங்க கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மலேசிய இந்து சங்க நிர்வாகக் குழுவிற்கான தேர்தலும் நடைபெற்றது. 27 பேர் கொண்ட மத்திய நிருவாகக் குழுவில் ஒன்பது பேர் விலகியதால் அந்த உச்ச அமைப்பிற்கு புதிதாக ஒன்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தலைவர் தங்க கணேசன் அணியின் சார்பில் அதிகமானோர் வெற்றி பெற்றதன் அடிப்படையில் நிருவாகக் குழுவில் அவருக்கு பெரும்பான்மை இருப்பதால் கணேசன் தங்கவேலுவே தலைவராக தொடர்கிறார்.

இன்றைய தேர்தலில் தங்க கணேசன் அமைத்த வெற்றி அணி சார்பில் ஏ. சுகுமாரன், ஜி. முனீஸ்வரன் குமார் ஆறுமுகம், முனைவர் விக்னேஸ்வரன் எம் ராதா, பரமசிவன் பொன் சந்திரன், உமா சுதன், க.விஜயபாஸ்கர் ஆகிய 9 பேர் போட்டியிட்டனர்.

இதில் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கணேஷ் பாபு அணியைச் சேர்ந்தவரும் இந்து சங்க மத்திய செய-லவையில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள வரும் கல்வியாளரும் இளம் தலைவரும் ஆன்மீக நெறியாளரும் இந்து சங்க காஜாங் வட்டாரப் பேரவை தலைவருமான முனைவர் முரளிதரன் தலைமையில் இன்னோர் அணி மறுமலர்ச்சி அணி என்ற தலைப்பில் போட்டியிட்டது;

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மா. முனியாண்டி, பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சிவம், பாலகிருஷ்ணன், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த க. மாணிக்கவாசகம், திருமதி எஸ்.பாலா மணி, மலாக்கா மாநிலத்தை சேர்ந்த கு.ஜெகசீலன்,
தினேஷ் வர்மன் குருக்கள்,
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமலா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் வெற்றி அணியை சேர்ந்த ஏ சுகுமாரன் 1026 வாக்குகள் ஜி.மு முனீஸ்வரன் 1021 வாக்குகள் குமார் ஆறுமுகம் 985 வாக்குகள் முனைவர் விக்னேஸ்வரன் 1026 வாக்குகள் எம்.ராத 2001 வாக்குகள்; பரமசிவன் 981 வாக்குகள் பொன் சந்திரன் 1027 வாக்குகள் உமா சுதன் 1009 வாக்குகள் கா விஜயபாஸ்கர் 980 வாக்குகள் பெற்று 9 பேரும் தங்க கணேசனின் வெற்றி அணி சார்ந்து வெற்றி பெற்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை