
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ ரா. தினாளனும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் அ.அச்சுதனும் போட்டியிடுகின்றனர்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களிலும் வென்று 100% வெற்றியை மஇகா பெற்றது.

இப்போது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது.
ஜொகூர் மாநில தேர்தல் வேறு. நெகிரி மாநில சட்டமன்றத் தேர்தல் வேறு.நெகிரியில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கு பெருமை.
தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் வெற்றிபெற்று நாம் தோல்வி கண்டால் அது பாதிப்பைக் கொண்டுவரும்.

ஆகவே இரண்டு தொகுதிகளிலும் மஇகா வேட்பாளர்கள் வெற்றிபெற கடுமையாக உழைக்கும்படி அவர் மஇகா உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.
நெகிரி செம்பிலான் மாநில மஇகா மண்டபத்தில் மஇகா தலைவர்கள் முன்னிலையில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.


