Thursday, August 13, 2026

தலைசிறந்த ஜனநாயகவாதி பிடல் காஸ்ட்ரோ!

1959-இல் இருந்து 2008-ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் கியூபாவை ஆண்ட ஜனநாயக சிந்தனையாளர் இடச்சாரி கொள்கையாளர் ஃபிடல் காஸ்ட்ரோ.

தன்னுடைய குடிமக்கள் அனைவருக்கும் இலவச கல்வியையும் இலவச மருத்துவத்தையும் அளித்த ஒரே ஆட்சியாளர் இந்த உலகில் ஃபிடல் காஸ்ட்ரோ மட்டுமே.

இன்று(ஆகஸ்ட் 13) கியூபாவின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் 100வது பிறந்தநாள்.

கியூபா முழுவதும் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மூலம் பிடல் காஸ்ட்ரோ நினைவுகூரப்படுகிறார்; ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அவரின் அரசியல் பாரம்பரியத்தை சீர்தூக்கிப் பார்க்கிறது.

பிடல் காஸ்ட்ரோ — பிறந்த நாள் & வாழ்க்கைபிறப்பு: ஆகஸ்ட் 13,

1926, இதே நாளில் கியூபாவின பீரான் நகரில் பிறந்த ஃபிடல் காஸ்ட்ரோ பத்தாண்டுகளுக்குமுன் (2016) நவம்பர் 25-இல் ஹவானாவில் 90ஆவது வயதில் காலமானார்.

கியூபாவின் பிரதமராகவும் அதிபராகவும் விளங்கிய பிடல் காஸ்ட்ரோ புவியின் மேற்கு அரைகோளப் பகுதியில் முதல் கம்யூனிஸ்ட் அரசை நிறுவியவர். 90 வயது வரை வாழ்ந்த அவரை கொல்வதற்கு ஏறக்குறைய 100 முறை அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

இலவச மருத்துவ சேவையையும் கல்வியையும் தன் குடிமக்களுக்கு வழங்கியவர்.

கஸ்ட்ரோவின் இன்றைய 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கியூபாவில் நடைபெறுகின்றன.

கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார காலத்திற்கு கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்துகிறது. இத்தாலிய இடதுசாரி இயக்கங்கள் கியூபாவுக்கு வந்து மருந்துகள், பொருட்கள் வழங்கி, ‘Fidel: Legacy and Future’ என்ற பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்றன.

சமூக ஊடகங்களில் #100YearsWithFidel என்ற ஹாஷ்டேக் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ஃபிடல் இல்லாத இன்றைய கியூபாவில் மின்சார தட்டுப்பாடு, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற கடுமையான நெருக்கடி
நிலவுகிறது. ‘காஸ்ட்ரோ இருந்திருந்தால் இதற்கெல்லாம் ஒரு திட்டம் வகுத்திருப்பார்’ என்று மக்கள் நினைவுகூர்கின்றனர். கியூபாவின் பெரும்பாலான மக்கள் அவரின் பாரம்பரியத்தை பெருமையுடன் நினைவுகூரும் அதே வேலை, இன்னும் சிலர் தற்போதைய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கின்றனர்.

ரஷ்யா உடன் நெருக்கமான அரசியல் உறவு கொண்டிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இருந்த போதும் அதிபர் பராக் ஒபாமா காலத்தில் அமெரிக்காவுடன் சமூக உறவு தழைக்க தொடங்கியது.

இன்றைய குடியரசு கட்சியின் ஆட்சி காலத்தில் குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் கியூபாவிற்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருபியின் கடலில் அமெரிக்கா மேற்கொள்ளும் கப்பல் தல கட்டுமானம் எரிபொருள் விநியோக தடை போன்றவற்றை அமெரிக்கா மேற்கொள்வது நிர்வாகம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

எது எவ்வாறாக இருந்தாலும் உலக அரசியல் வரலாற்றில் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு முக்கிய இடம் நிலை பெற்றிருக்கும்.!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை