
திராவிட வெற்றிக் கழக தலைவர் மல்லை சி ஏ சத்தியா தலைமையில் மலையகத்தின் எஸ் பி மணிவாசகத்திற்கு இராசராசன் விருது வழங்கிய சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின்ன் 79- வது விடுதலை நாளை முன்னிட்டு பல்லவப் பேரரசின் துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த புகழ்வாய்ந்த மாமல்லபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சி ஏ சத்யா பங்கேற்று உரையாற்றினார்
மாமல்லபுரம் பெருந்தமிழன் அரங்கில், முன்னதாக மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கலைச்செம்மல்
த பாஸ்கரன் தலைமையில்
40 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது

அந்த நிகழ்ச்சியில், மலேசியத் தமிழர் சமூகப் பண்பாட்டு நட்புறவுப் பயணமாக தமிழ் நாட்டிற்குச் சென்ற ர தமிழ் ஆளுமை
S P மணிவாசகத்திற்கு மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் அயலகத் தமிழர்களுக்கான பெருந்தமிழன் இராசராசன் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டார்.
அவருடன் வந்த மலேசிய உறவுகளுக்கு பொன்னாடை மணிமாலை அணிவித்து நூல்களை பரிசளித்து மாமல்லா கடற்கரை நட்சத்திர விடுதியில் விருந்தோம்பலும் நல்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் பெருந்தச்சன் முருகன் சிற்பி இளையராஜா பொறியாளர் இளம்வழுதி மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை மாஸ்டர்கள் அமைப்பின் தேசிய செயலாளர் மாமல்லன் ஷி ஷிஃபூ அசோக்குமார் ஷி ஷிஃபூ ஜோதி ராமலிங்கம் மற்றும் மோகன் தினேஷ் சுரேஷ் நாக பாண்டியன் கார்த்திக் ராஜேஷ் பொன் வானதி பரத் சிறிதர் ஜெகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திராவிட வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் திராவிட ரத்னா புலவர் கங்காதரன் பொறியாளர் கதிரவன் தனசேகர் குமார் மாஸ்டர் சிகாமணி சுந்தர மூர்த்தி சரவணன் மணிவண்ணன் கார்த்திக் மனோகர் தாயகம் சரவணன் ஆறுமுகம் மனோகர் குமார் நவீன் சசிகுமார் புருஷோத் அரி கோபால் தனபால் மதன் அருன் குமார் பிரபாகரன் தரணி வழக்கறிஞர் எமலன் செளமியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்று மல்லை தமிழ்ச்சங்க தலைவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆசிய மண்டல தலைவரும் பன்னாட்டு மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை அமைப்பின் தலைவருமான மல்லிகை சத்தியா தகவல் தெரிவித்தார்.


