Saturday, September 12, 2026

ஒன்று இரண்டு தெரியாத புதுடில்லி வட்டம்!

இந்தியா, 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் ஆங்கில ஆதிக்கத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

உலக வரலாற்றில் அது ஒரு முத்திரை நிகழ்ச்சி.

அதன் நினைவாக அடுத்த ஆண்டு 1948 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா தனது முதல் விடுதலை நாளைக் கொண்டாடியது.

அந்த வகையில், 2026-ஆகஸ்ட் 15ஆம் நாள் கடந்த சனிக்கிழமை இந்தியா தனது 79வது விடுதலை நாளைத்தான் கொண்டாடி இருக்க வேண்டும்.

அதை விடுத்து இந்தியா என்னவோ ஆண்டுதோறும் விடுதலை அடைவதைப் போல 1947 வரலாற்று சம்பவ நாளையும் கணக்கிட்டு 80-ஆவது விடுதலை நாள் என்று கடந்த சனிக்கிழமை கொண்டாடியது! இந்த தவற்றை ஆண்டுதோறும் செய்கிறது இந்தியா; ஓராண்டைக் கூட்டிக் கொண்டே கொண்டாடி வருகிறது.

இந்தியா ஒரேவொரு முறைதான் விடுதலை அடைந்தது. அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை 79வது விடுதலை நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக 80ஆவது விடுதலை நாள் என்று பறைசாற்றிக் கொண்டது வினோதத்திலும் வினோதம்.

இதை எண்ணிப் பார்க்கவும் எடுத்துச் சொல்லவும் அந்தப் பெருநாட்டில் ஒருவரும் இல்லை போலும்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை