
எத்தகைய விமர்சனத்திற்கும் அஞ்சாத மரத்த மனத்தினளும் வஞ்சகத்தை காலமெல்லாம் தன் மனதில் குடியேற்றி வைத்திருந்தவருமான ஜெயலலிதா, எந்த காரணமும் இன்றி வஞ்சகத்தின் அடிப்படையில் கலைஞரை கைது செய்த பொழுது, குறுக்கே வந்த முரசொலி மாறனை ஜெயலலிதாவின் காவல் படை முரட்டுத்தனமாக கையாண்டது.
ஏற்கனவே இதயம் பாதிக்கப்பட்டு சீரான இதயத்துடிப்பிற்காக பேஸ் மேக்கர் என்னும் கருவியை பொறுத்தி இருந்த முரசொலி மாறன் அப்பொழுது கடுமையான உடல் நல பாதிப்பிற்கு உள்ளானார்.
அதிலிருந்து கடைசி வரை மீளாமல் அவர் மறைந்த பொழுது கலைஞர் துடித்து துடிப்பு அவருக்கேத் தெரியும்.
முரசொலி மாறன் வாழ்ந்த வரை கலைஞரின் மனசாட்சியாகவே தொடர்ந்தார்.
முரசொலி மாறன் இயற்றிய திராவிட நாடு என்னும் நூலை படித்தாலே தெரியும் அவர் எத்தகைய அரசியல் மேதை என்று;
வாஜ்பாய் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலி மாறன் டோஹா வர்த்தக உச்ச நிலை மாநாட்டில் ஆற்றிய உரை, அவர் இந்திய தேசிய உணர்வையும் உரிமைக் குரலையும் எந்த அளவுக்கு உயர்த்திப் பிடித்தார் என்பதை உலகே அறிந்தது.
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும் திரைப்பட தயாரிப்பாளரும் வசனகர்த்தா-வுமான தியாகராஜ சுந்தரம் என்னும் இயற் பெயரைக் கொண்டவர் முரசொலி மாறன்; அவருக்கு இன்று பிறந்தநாள்.
முரசொலி மாறனின் 93வது பிறந்தநாள் தொடர்பில் திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் திமுக–வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
இன்று காலை 9.30 மணியளவில் புதுச்சேரி மாநில கழக சார்பில், லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் திருவுருவப் படத்திற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் திமுக நிர்வாகியரும் தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளரூம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வே. கார்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், மாநில துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி. அருட்செல்வி, தொகுதி பொறுப்பாளர் எஸ். கோபால், மங்கலம் எஸ்.எஸ். ரங்கன், இந்திரா நகர் பசுபிக் சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் ந. தங்கவேலு, ஜெ.வேலன் (எ) கோவிந்தன், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நட ராஜன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், சவுரிராஜன், ரா. ஆறுமுகம், பி.சா. இளஞ்-செழிப்பாண்டியன், ராதாகிருஷ்ணன். கலிய கார்த்திகேயன், அணிகளின் அமைப்பாளர்-கள் இலக்கிய அணி சீனு. மோகனதாசு, நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கிய ராஜ், மகளிர் அணி காயத்ரி, மகளிர் தொண்டர் அணி சுமதி, வர்த்தகர் அணி ரமணன், அணிகளின் துணை நிர்வாகிகள் குரு, தர்மன், ராஜேஷ், தேவேந்திரன், தாமரைக்கண்ணன், அன்பழகன், விஜி (எ) வெங்கடேசன், பாலகுரு, ரபேல், கருணா-கரன், அஜிபாஷா, அருண் சுப்பிரமணியன், சிவதாசன், யோகேஷ் பிரியதர்ஷினி, விஜயலட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


