
தீரர்களின் கோட்டம் திருச்சி மலைக் கோட்டையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்தநாள் விழா, ‘திராவிட ரத்னா’ விருதுகள் வழங்கும் முப்பெரும் விழாவாக செப்டம்பர் 15-இல் நடைபெற இருக்கிறது.
இதந்தொடர்பில், சுவர் விளம்பரங்கள் திருச்சி மாநகரில் திரும்பிடும் திசை தோறும் பளிச்சிடுகின்றன. அந்த வழியாக செல்லும் நண்பர்கள் தோழர்கள் நலன் விரும்பிகள் பார்த்து அழைத்து மகிழ்வுடன் தெரிவித்தனர்.
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் செயல் வீரர் எமக்குட்டி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்து.

ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட கர்நாடக அரசின் அடாவடி அரசியலை அம்பலப் படுத்திட மேட்டூரில் இருந்து மேகதாது முற்றுகைப் போராட்டம் திராவிட வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் மானமிகு கொளத்தூர் மணி, இந்தப் போராட்டத்தை தொடக்கி வைக்க உள்ளார்
இப்போராட்டத்தில் பங்கேற்க பயண திட்டம் வகுத்து தொடர் வண்டி முன்பதிவு செய்து வருகின்றனர். அருகில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் வாகனங்களில் வர ஆயத்தமாகிக் கொண்டு இருகின்ற தகவலும் வந்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் காக்கும் களத்தில் திராவிட வெற்றிக் கழகம் சமரசம் இல்லாமல் தொடர்ந்து களத்தில் நின்று போராடும்
போராட்டத்திற்கு நாள் குறித்தவுடன் அதை வெற்றிபெற வைக்க துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் துரிதமாக செயல்பட்டு வியூகங்களை வகுத்து இலக்கிய அணி மாநில தலைவர் இலுப்புலி நடேசன் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோருடன் ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை மேட்டூர் சென்று இடத்தைப் பார்வையிட்டு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சி
என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்
*மல்லை சி ஏ சத்யா *
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்
18-08-2026


