
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்ற ஏற்பாட்டிலும் முனைப்பிலும் நாளை கோப்பெங் பட்டணத்தில் நடைபெற இருக்கின்ற பன்னாட்டு தொல்காப்பியர் முதலாம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூரில் இருந்து தமிழ் ஆர்வலர்கள் 20 பேர் தனிவாகனத்தில் நாளை விடியற்காலையில் புறப்படுகின்றனர்.

மெந்தகாப் சரஸ்வதி, செமிஞி மங்கலம், அமராவதி, முனைவர் பரிமளா.
தமிழ்நெஞ்சர் ஜோசஃப் செபஸ்டியன் தலைமையில் புறப்பட இருக்கின்ற இந்தக் குழுவில் பத்துமலையைச் சேர்ந்த ‘வைரகவி’ ஏ.ஆர். சுப்பிரமணியன், கிள்ளான் பாவலர் பத்மநாதன், செல்வா ஆர்ஆர்ஐ, கவிஞர் பொன். பொன்னு சாமி, துரைசிங்கம் (பந்திங்), பரிமளம், கருப்பையா(கிள்ளான்),
மங்களம், விஜயலெடசுமி(கோலாலம்பூர்), பரிமளா(பத்து மலை),
அமராவதி (ரவாங்), சுகந்தினி(ரவாங்), சரஸ்வதி(மெந்தகாப்), ஸ்ரீதரன்,
மகேஸ்வரி(பிரிக்பீல்டஸ்) உள்ளிட்டோர் புறப்படுகின்றனர்.

பாவலர் பத்மநாதன், கவிஞர் பொன்னுசாமி, கருப்பையா இராமசாமி, ஸ்ரீதரன்.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் வெள்ளி விழாவாகவும் நடைபெற இருக்கும் இந்த இனியவிழா இம்மலையக சொல்வேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணனின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

சிங்கப்பூர், தமிழ் நாடு, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த விழாவில், தமிழ் மணமும் வீசும்; தமிழரின் மேன்மையும் தமிழின் தொன்மையும் புதுப்பிக்கப்படும் இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடும் நடைபெற்று வருவதாக மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் முத்தமிழ்ப் பாவலர் மன்றத் தலைவருமான முனைவர் பாவலர் அருள் ஆறுமுகம் குமர் வான்முற்ற இணைய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சுகந்தினி

வைரகவி ஏ. ஆர். சுப்பிரமணியன், செல்வா ஆர். ஆர்.ஐ., விஜயலட்சுமி, மகேஸ்வரி.


