Saturday, September 12, 2026

வட்டுவீரன்-சின்னமருது மைந்தன் துரைசாமியின்வீரவரலாறு படிந்த சிறையைப் பார்வையிட்டார் மல்லை சத்தியா!

பன்னாட்டு தொல்காப்பியர் முதல் மாநாடு நாளை பேராக் மாநிலம், கோப்பெங் நகரில் நடைபெற இருக்கின்ற நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து வருகை தந்துள்ள மல்லை சத்தியா சுதந்திர போராளி, வட்டு எரியும் கலையில் தேர்ந்த வீரன் துரைசாமி, ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பிரின்ஸ் வேல்ஸ்(பினாங்கு) தீவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறைவாசம் இருந்து, உயிர் நீத்த தியாக வரலாற்றைக் கொண்ட சிறைச்சாலையை இன்று காலையில் பார்வையிட்டார்.

தொடர்ந்து பினாங்கில் உள்ள மலேசிய தமிழர் குரல் அலுவலகம், இந்து மகா சன சங்க அலுவலகம், ஜாலான் பாரு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயம் ஆகிய இடங்களுக்கும் வருகை மேற்கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை