Monday, September 14, 2026

2027 பட்ஜெட்டில் வெ.1 பில்லியன் ஒதுக்கீடு: -பொன். வேதமூர்த்தி கோரிக்கை!

மலேசிய இந்திய உழைக்கும் வர்க்கத்தினருக்காக, 2027 பட்ஜெட்டில் வெ.1 பில்லியன் ஒதுக்கீட்டுடன் தொடங்கும் ஓர் உறுதியான 10 ஆண்டுகால பொருளாதார பெருந்திட்டத்தை மலேசிய முன்னேற்ற கட்சி-எம்ஏபி வலியுறுத்துகிறது என்று அதன் தலைவர் பொன். வேதமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.

“வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்பட-விருக்கும் 2027 பட்ஜெட்டில், உழைக்கும் வர்க்க இந்திய சமூகத்திற்காக பிரத்யேக-மாக வடிவமைக்கப்பட்ட, உறுதியான 10 ஆண்டு கால பொருளாதார பெருந் திட்டத்தை, உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்”.

மலேசிய இந்திய உழைக்கும் வர்க்கத்தின-ருக்கு உண்மையான, நீண்டகால சமூக-பொருளாதார முன்னேற்றத்தை எட்டுவதற்-காக ஒரு நிலையான பொருளாதாரக் கட்டமைப்பை நோக்கி நகர வேண்டும் என்று எம்.ஏ.பி. வலியுறுத்துகிறது என்று மலேசிய இந்திய சமூகப் பேச்சாளருமான பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, பிரதமர் சிறுபான்மை இந்திய சமூகத்தை மேம்படுத்-துவதாக வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். ஆயினும், 13வது மலேசியத் திட்டம் (13MP), அந்த சமூகத்தினருக்கான எந்த சிறப்பு சமூக-பொருளாதாரத் திட்டத்தையோ அல்லது இலக்கு வைக்கப்பட்ட செயல் திட்டத்தையோ முற்றிலுமாகத் தவிர்த்தி-ருப்பதன் மூலம், உழைக்கும் வர்க்க இந்தியர்களைத் தலை-முறை தலைமுறையாகப் பாதிக்கப்படக்-கூடிய நிலைக்கு முழுமையாகத் ஆளாக்கு-கிறது.

“எனவே, தேசிய வரவு செலவுத் திட்டத்தி-லிருந்து சமூகம் முற்றிலுமாகப் புறக்க-ணிக்கப்படுவதிலிருந்து தவிர்க்கவும் பொருளாதார முடக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் ஒரு தனியான, பிரத்யேகமான 10 ஆண்டு காலப் பொருளா-தாரப் பெருந்திட்டம் இப்போது அவசியம் தேவைப்படுகிறது என்று எம்.ஏ.பி. வலியுறுத்துகிறது”.

அரசாங்கத்தின் தற்போதைய பொருளா-தாரக் கொள்கையும் போக்கும், வரலாற்று ரீதியாக இடம்பெயர்ந்த 8,00,000 தோட்டத் தொழிலாளர்களின் அமைப்பு ரீதியான துயரத்தை இரண்டாம்பட்சமாகக் கருதுகிறது;

மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய, தெக்குன் நேஷனல் (SPUMI) மற்றும் அமானா இக்தியார் மலேசியா (AIM) போன்ற சிறு குறுங்கடன் திட்டங்களை மட்டும் சார்ந்திருப்பது, இந்திய சமுதாயத்-திற்கு பலன் தராது.

இது, ஒருவருக்கு வெற்றி பெறுவதற்கான உண்மையான வாய்ப்புகளை ஏற்படுத்து-வதற்குப் பதிலாக, ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஒரு சிறிய மண்வெட்டியைக் கொடுப்பதைப் போன்று உள்ளது.

பெரும்பான்மை சமூகத்தை மேம்படுத்து-வதற்காக, பூமிபுத்ரா பொருளாதார மாற்றுத் திட்டம் (PuTERA35) போன்ற வலுவான பொருளாதாரச் செயல்திட்டங்களின் இன்றியமையாத தேசியத் தேவையை மலேசிய முன்னேற்றக் கட்சி. முழுமையாக அங்கீகரித்து, மதித்து, ஆதரித்தாலும், உழைக்கும் வர்க்க இந்திய சமூகத்திற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 10 ஆண்டு காலப் பொருளாதாரப் பெருந் திட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று சட்ட வல்லுநருமான பொன். வேத மூர்த்தி தெரிவித்துள்ளார்.

“நலிந்த இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வெளிப்படைத் தன்மை-யுடன், புரட்சிகரமான முன்மாதிரியாக இந்தத் திட்டம் திகழ, இதற்கு ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 1 பில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு அவசியமாகும்”.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், நாட்டின் பெரும் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகளிலிருந்தும் பெருநிறுவன உரிமையிலிருந்தும் இந்திய சமூகம் முற்றி-லுமாக விலக்கப்பட்டுள்ளது. தெக்குன் நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா (AIM) போன்ற குறுங்கடன் திட்டங்கள், குறுகியகால கடன் வசதியை வழங்கினாலும் உழைக்கும் வர்க்க இந்தியர்களால் கடனை மட்டும் கொண்டு நீண்ட கால, உறுதியான பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது.

நாடு அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை இந்திய சமூகமும் உண்மையாகப் பகிர்ந்துகொள்ள, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான வழிமுறை-களைக் காண வேண்டும்.

இதன்பொருள், அடிப்படை குறுங்கடன்-களைத் தவிர, இந்தியர்களுக்குச் சொந்த-மான நிறுவனங்களை உயர் மதிப்புள்ள பொருளாதாரத் தளங்களில் ஒருங்கி-ணைத்து, சக மலேசியர்களுடன் இணைந்து உண்மையான சமத்துவத்தை உருவாக்கு-வதை உறுதி செய்வதாகும்.

2027 பட்ஜெட் வெறும் பெயரளவிலான சலுகைகளை கடந்துசெல்ல வேண்டும் என மலேசிய முன்னேற்றக் கட்சி வலியுறுத்து-கிறது.

நாங்கள் முன்மொழிந்துள்ள 10 ஆண்டு பெருந்திட்டத்தின் முதல்படியாக, வெ.1பில்-லியன் மதிப்பிலான உறுதியான வருடாந்திர வளர்ச்சி நிதியை வலியுறுத்துகிறோம் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

உழைக்கும் வர்க்க இந்தியர்களைச் சிற்சிறு கடன்களிலிருந்து விடுவித்து, அவர்களைப் பெரிய அளவிலான செல்வ உருவாக்கம், பெருநிறுவன கொள்முதல் வாய்ப்புகள் மற்றும் வலுவான தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) உள்கட்டமைப்பு ஆகியவற்-றில் நேரடியாக ஒருங்கிணைப்பதற்கு இந்த பிரத்யேக நிதி ஒதுக்கீடு இன்றியமையாதது.

உண்மையான பிரச்சனை என்னவென்றால், இந்திய சமூகம் நாட்டின் பெரிய செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகளிலிருந்தும் பெரு நிறுவன உரிமையிலிருந்தும் முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது.

மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி-யின் இந்த முன்னெடுப்பு தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முழுமையாகப் பங்களிக்கும். இதன் மூலம், நம் நாடு இன்னும் முன்னேற்-றம் காணும்; ​​உழைக்கும் வர்க்க இந்திய சமூகம், சக மலேசியர்களுடன் இணைந்து, உற்பத்தித்திறன் மிக்க, தன்னிறைவு பெற்ற பங்காளிகளாக வளர்வதை உறுதி செய்ய இந்த முன்னெடுப்பு அவசியம் என்று முன்னாள் அமைச்சருமான பொன் வேத மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை