
இந்தோனேசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபையாந்தோ(Prabowo Subianto) அலுவல் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார்.
மலேசிய மன்னர் மாண்புசால் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தார் அழைப்பின் அடிப்படையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரபோவோ சுபையாந்தோ பயணம் செய்த சிறப்பு போயிங் விமானம் ‘737 73- க்யூ’ இன்று ஜனவரி 27 திங்கட்கிழமை காலை 5: 50மணி அளவில் சுபாங் மலேசிய அரச விமான தளத்தில் வந்து இறங்கியது.

அதிபருடன் இந்தோனேசிய அமைச்சரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை மலேசிய இயற்கை வள, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட்(Nik Nasmi Nik Ahmad) எதிர்கொண்டு வரவேற்றார்.
விமான நிலையத்திற்கு வந்ததும் இந்தோனேசிய அதிபருக்கு முதல் நிலை பட்டாளியன் ராயல் ரேஞ்சர் படைப்பிரிவின் கேப்டன் முகமட் ஷாபிக் நஜ்மி மஸ்லான் தலைமையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது
.


