Saturday, September 12, 2026

மல்லை சத்தியா இணையரை சந்தித்த பெருமிதத்தில் இராஜேந்திரன்

கடந்த 25.08.2026-இல் கோலாலம்பூர் ரோயல் லேக் கிளப்பில் சகோதரர் மல்லை சத்தியா அவர்களை அவரின் துணைவியாருடன் சந்திந்தோம்.

மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள மல்லை சத்தியாவை இம்முறை தம் துணைவியாருடன் வந்திருப்பதால்
அவர்களுக்கு விருந்து உபசரிப்பு நடத்த முயன்றேன்.

நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சிகளில் சிக்கிவிட்டார். செல்லும் நாடுகளில் எல்லாம் அவரை வரவேற்க நட்புப் பட்டாளம் நிறைந்து இருக்கும். இங்கு இன்னும் சற்று அதிகம்.

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்க நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன் அவர்கள் மல்லை சத்தியாவிற்காக ஒரு உபசரிப்பு நடத்தினார். என்னையும் என் துணைவியார் முனைவர் இராஜத்தையும் அழைந்திருந்தார். சென்றோம்.

தமிழன்பர் .ப.கு.சண்முகம், சகோதரர் மன்னர் மன்னன் மருதை,
சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் மதிவாணன்
சுபாங் ராஜகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சென்னைக்குப் போகும்போதெல்லாம்
அன்பால் திக்குமுக்காடச் செய்யும்
திரு-திருமதி மல்லை சத்தியா இணையரை இந்தப் பயணத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்கிற கவலை தீர்ந்தது.

பெ. ராஜேந்திரன்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை