
ரவாங் பண்டார் செக்சன் 18 தேவி அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா வரும் திங்கள்கிழமை ஆகஸ்ட் 31ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

இதன் தொடர்பில் ஆலயத்தில் கொடிமரம் நாட்டும் பணியும் நடைபெற்று வருகிறது
இதற்காக மியன்மாரில் இருந்து தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு தேக்கு மரத்தோடு இரண்டு மரச்சிற்பியரும் வரவழைக்கப்பட்டு கொடி மரத்திற்கான சிற்ப வேலை நடைபெற்று வருகிறது.
சதுர வடிவ தேக்கு மரத்தில் கொடி மரத்திற்கு உரிய சிற்ப வேலைபாடுகளை இரண்டு மியன்மாரிய சிற்பியரும் மிக மிக இயல்பாக ஏதோ மாவில் உருவம் செய்வதை போல மிக சாதரணமாக ஓவியம் வரைவது போல அவர்கள் இருவரும் செதுக்குவது மிக வியப்பை தந்தது.
இந்த இருவரும் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர்கள் போலும்.

மலேசிய ஆன்மீக வரலாற்றில் இவ்வாறு பர்மா தேக்கு மரத்தை ஆலய வளாகத்திற்கு கொண்டுவந்து அதே மியான்மார் சிற்பிரைக் கொண்டு கொடிமரம் செதுக்குவது இதுதான் முதல் முறை என தெரிவிக்கப்பட்டது.


