Monday, September 14, 2026

சுபாங் அருள்மிகு வேட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று 53 ஆம் ஆண்டுத் திருவிழா!

சிறு தெய்வ வழிபாட்டு தலமாக இருந்து தற்போது பெருந்தெய்வ வழிபாட்டுத் தலமாக உருமாறி உள்ள சுபம் அருள்மிகு வேட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று 5 3 வது ஆண்டு விழா அதன் தலைவர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

மனோ பிரதர்ஸ் குழுவினர் உட்பட அதிகமானோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆண்டு திருவிழாவில் ஏறக்குறைய 3,000 பேர் கலந்துகொண்டு ஐயனின் அருளை நாடினர்.

உறுமிமேள இசை, செண்டை மேள இசை, நாதஸ்வர மத்தல இசை முழங்க பக்தி பரவசம் மேலெழ ஐயன் முனீஸ்வரருக்கு படை எடுத்த பெண் ஆயிரக்கணக்கான பேருக்கு உணவு பரிமாறப் பட்டது.

தொடக்கத்தில் தோட்டக்கொல்ல மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய இந்த அருள்மிகு முனீஸ்வரர், தற்பொழுது அரை நூற்றாண்டை கடந்து விட்டாலும் இந்த ஆலயத்திற்கு இதுவரை நிலப் பட்டா(டிஓஎல்) கிடைக்காமல் இருப்பது பெரும் பாதிப்பாக இருப்பதாக ஆலயத் தலைவர் குறிப்பிட்டார்.

இது அரசு சார் நிலமாக இருப்பதால் நிலப்பட்ட கிடைத்த பின்னர்தான் சங்க பதிவகத்தில் இந்த ஆலயத்தை பதிவு செய்ய முடியும் என்பதால் நில பட்டா பெறுவதற்காக பலவகையாலும் போராடி வருகிறோம் இதுவரை நிலப்பட்டால் கிடைக்காமல் இருப்பது மிகுந்த வருத்தமாக இருப்பதாக ஆலய தலைவர் ரகுபதி மேலும் தெரிவித்தார்.

தோட்டப்புறங்கள் இருந்த நிலை மாறிவிட்டாலும் நகர்ப்புற வாழ்க்கைக்கு மாறிவிட்ட இந்த இன்றைய சூழலில் இன்னமும் பல்லாயிரக்கணக்கானோரின் வழிபாட்டு தளமாக இந்த ஆலயம் தொடர்வதால் இதை கவனத்தில் கொண்டு நிலப்பட்ட கிடைப்பதற்கு மாநில அரசாங்கம் உதவி வேண்டுமென்று ரகுபதி மேலும் கேட்டுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை