
அரசாங்க, சமூக & சுகாதார சேவைகள் பற்றி மக்கள் நன்கு தெரிந்து கொண்டு பயனடைவதற்கு ஏதுவாக அரசுசார் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவோடு ஓரிட சேவை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
குரு தர்மா சங்கம், பெட்டாலிங் மாவட்ட சமூக நல அலுவலகம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் (17ஆவது பிரிவு), ஆகிய தரப்பினரின் ஆதரவோடு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக ஏற்பாட்டுக் குழு தலைவர் அம்சா நாயுடு தெரிவித்தார்.
தங்களுக்கான உதவிகளை சம்பந்தப்பட்ட அரசு இலாகாக் களிடமிருந்து எவ்வாறு பெறுவது, எந்தெந்த உதவிகளுக்குத் தாங்கள் தகுதியானவர்கள் என்பதை இவர்கள் இந்நிகழ்ச்சிவழி தெரிந்து கொண்டனர்.

பொதுமக்கள் சமூக நல இலாகா,சொக்சோ,தேசிய பதிவிலாகா, மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம்,தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், சிலாங்கூர் மாநில ஸகாத் வாரியம்,பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, தேவையான தகவல்களையும் சேவைகளையும் இவர் கள் பெற்றுக் கொண்டனர்.
பெண்களுக்காக சமையல், கேக் செய்யும் பயிற்சி, நக அலங்கார பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி போன்றவையும் நடத்தப்பட்டன.

இதனையடுத்து 50 க்கும் மேற்பட்ட சிறார்கள் வர்ணம் தீட்டும் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதிர்ஷ்ட குலுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மேலும் உற்சாக த்தை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் மலேசிய SWCorp தலைவர் துவான் ஹீ லோய் சியான், தாமான் மேடான் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் துவான் ஹலிமே அபு பாக்கார், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் (17ஆவது பிரிவு)நோரா மன்சோர் குரு தர்மா சங்க புரவலர் டத்தோ படுக்கா கதிஜா உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


