
செப்டம்பர் 2 உலகத் தேங்காய் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
2009 ஆம் ஆண்டிலிருந்து Asian and Pacific Coconut Community (APCC) முன்னெடுப்பில் தொடங்கிய இந்த நாள், மனித வாழ்வில் தேங்காய் வகிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
2026க்கான தலைப்பு ‘Coconuts in Times of Uncertainty: Securing Food, Energy, and Livelihoods’ (உறுதிமற்ற காலத்தில் தேங்காய்: உணவு, ஆற்றல் வாழ்வாதாரத்தைப் பாது காத்தல்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் “Tree of Life” என அழைக்கப் படுகிறது. உணவு, பானம், எண்ணெய், நார், கரி என அனைத்தையும் தரும் மரமாக அது விளங்குகிறது.
சமையலில் தேங்காய்ப் பால் பயன்படுத்து-கிறது; சிலர் தேங்காய்க் கீற்று அல்லது பற்றை அம்மி அல்லது ‘மிக்சி’ மூலம் அறைத்து குழம்பில் பயன்படுத்துகின்றனர்;
தேங்காய் கிரீம், துருவல் ஆகியவை குழம்பு, இனிப்புப் பண்டம், பான தயாரிப்பு போன்ற-வற்றில் தேங்காய் பயன்படுத்தப் படுகின்-றது.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா,
இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேங்காய் சமையலின் அடையாளமாகவும், வாழ்வாதாரத்தின் ஆதாரமாகவும் உள்ளது.

இந்து சமயத்தில் தேங்காய் உடைப்பது அகங்காரத்தை உடைத்தல் எனும் அடை-யாளமாகக் கருதப்படுகிறது.
ஆலய வழிபாட்டில், குறிப்பாக பூசனை (அர்ச்சனை)யில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேசமயம், தேங்காய் நீர் இயற்கை எலக்ட்ரோலைட் எனக் கருதப்பட்டாலும், அது தினசரி நீருக்கு மாற்றாகப் பயன்படுத்தப் படக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கால நிலை மாற்றத்தால், தேங்காய் உற்பத்-தியில் பாதிப்பு- தேங்காய் விலை உயர்வு போன்ற சவால்கள் இருந்தாலும், நிலை-யான தேங்காய் பயிரிடல் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கும், ஆற்றல் தேவைக்-கும் வாழ்வாதாரத்திற்கும் முக்கியக் கூறாக விளங்குகிறது தேங்காய்.
முற்றிய தென்னை மரம் பட்டுப்போன பின் அது நீரோடைகளில் பாலமாக பயன்படுத்தப் படுகிறது; கூரை வீடுகளுக்கு உத்திரமாக-வும் கூரை வேயவும் பயன்படுத்தப்படுகிறது; தென்ன மட்டை அடுப்பிற்கு விறகாகவும் தேங்காய் மட்டை கயிறு திரிக்கவும் பயன் படுகிறது; இளந்தேங்காய் தாகம் தணிக்கும் நீராக பயன்படும் அதே வேலை இளநீர் மருத்துவ குணத்தையும் கொண்டிருக்கிறது; எல்லாவற்றுக்கும் மேலாக முற்றிய தேங்-காய் எண்ணெய் தயாரிக்கவும் பயன்படு-கிறது; தென்னம் மட்டை கீற்றாக கூரை வேயவும் பந்தலிடவும் பயன்படுகிறது; வாறுகோல் அல்லது துடைப்பம் தயாரிக்க-வும் தென்னம் ஓலை பயன்படுகிறது.

மொத்தத்தில் மனித குலத்திற்கு துணை-யாக இருக்கின்ற தென்னை மரத்தையும் அதில் விளையும் தேங்காய்யையும் இன்று நினைவிற் கொள்வோமே!


