
கோலாலம்பூர் செப் 2-
மலேசிய இந்திய கால்பந்து சங்கம் (MIFA), MIFA BEYOND–AIMST தேசிய U12 மாநிலங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி மீண்டும் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.
இப்போட்டி வரும் சனிக்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி பினாங்கு Padang Polo அரங்கில் நடைபெறவுள்ளது.
MIFA-வின் கால்பந்து மேம்பாட்டு முயற்சியான ‘MIFA BEYOND’ திட்டத்தின்கீழ் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளம் கால்பந்து வீரர்களுக்கு போட்டித்தன்மை கொண்ட ஒரு தளத்தை வழங்கி, அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் மதிப்புமிக்க போட்டி அனுபவத்தைப் பெறவும் மைதானத்திலும் அதற்கு வெளியிலும் தேவையான தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் குழு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் போட்டி உதவும் என்று அவர் சொன்னார்.

இந்த ஆண்டு போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் ஏறக்குறைய 450 இளம் வீரர்களும் 120 அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அணியின் அதிகாரிகள், குடும்பத்தினர், ஆதரவாளர்கள், கால்பந்து ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏறக்குறைய 3,000 பேர் இந்த நிகழ்வுக்காக
பினாங்கில்
கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
மாபெரும் அளவிலான இந்த ஏற்பாட்டில் மக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இளம் விளையாட்டாளர்கள் தம் திறமையை வளர்ப்பதற்கான ஒரு தளமாகவும் அமையும்.
அது மட்டுமல்லாமல், குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான தளமாகவும் இளையோரிடையே கால்பந்து ஆர்வத்தை வளர்ப்பதற்கான நிகழ்ச்சியாகவும் இது அமையும்.

MIFA-வின் நம்பிக்கைப்படி, மலேசிய கால்பந்து விளையாட்டின் எதிர்கால வளர்ச்சி அடித்தள நிலையிலிருந்தே தொடங்க வேண்டும்.
திறமை மட்டும் போதாது; இளம் வீரர்களுக்கான வாய்ப்பு, அனுபவம், திட்டமிட்ட வளர்ச்சி ஆகிய கூறுகளுடன் இளம் கால்பந்து வீரர்கள் கற்றுக்கொள்ளவும் வளரவும், தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவும் இந்த விளையாட்டுப் போட்டி ஒரு வாய்ப்பாக அமையும்.
MIFA BEYOND மூலம், இத்தகைய வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்குவதிலும் திறமையான இளம் கால்பந்து வீரர்கள் தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொண்டு, கால்பந்து விளையாட்டின் உயர்ந்த நிலையை நோக்கி முன்னேறுவதற்கான பாதையை ஏற்படுத்துவதிலும் MIFA உறுதியாக உள்ளது.
இந்தப் போட்டி,
AIMST பல்கலைக்கழகத்துடனான MIFA-வின் கூட்டாண்மயை மேலும் வலுப்படுத்தப்படவுள்ளது.
இது இளம் தலைமுறையினருக்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதில் இரு தரப்பினரின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
MIFA தலைவர் K.V. அன்பானந்தன் மேலும் கூறுகையில் இந்தப் போட்டி மலேசிய கால்பந்து உலகிற்காக எதிர்காலத்தில் செய்யப்படும் ஒரு முக்கியமான முதலீடு என்றும், குறிப்பாக இளம் வயதிலிருந்தே வீரர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மிகவும் முக்கிய அம்சமாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இளம் கால்பந்து வீரருக்கும் கனவு காணவும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
MIFA BEYOND மூலம், இளம் வீரர்களுக்கு போட்டித்தன்மை கொண்ட கால்பந்து அனுபவத்தை வழங்குவதுடன், ஒழுக்கம், குழுப்பணி, தன்னம்பிக்கை மற்றும் மரியாதை போன்ற முக்கியமான பண்புகளையும் வளர்ப்பதே சங்கத்தின் நோக்கமாகும்.
MIFA-வின் கூற்றுப்படி, U12 பிரிவில் வளர்ச்சி என்பது கால் பந்து போட்டியில் கலந்து கொள்வது கோப்பைகளையும் வெல்ழது ஆகியவற்றைக் கடந்ததாகும்.
குழந்தைகளை கால்பந்து விளையாட்டின்பால் தொடர்ந்து ஈடுபட ஊக்குவித்தல், அவர்களின் குணநலன்களை வளர்த்தல், எதிர்காலத்தில் அவர்கள் திறமையுடன் விழுங்குவதற்கான வாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்டவை இந்த ஏற்பாட்டின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் மேலும் விவரித்தார்.
‘MIFA BEYOND–AIMST- National U12’, மாநிலங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி 2026, வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமின்றி, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்களும் ஒன்றிணைந்து விளையாட்டின் மீதான தங்கள் ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்.
ஏறக்குறைய 450 வீரர்கள், 120 அதிகாரிகள் உட்பட ஏறக்குறைய 3,000 பேர் பினாங்கில் கூடுவதன்மூலம், மலேசியாவின் அடுத்த தலைமுறை, கால்பந்து விளையாட்டாளர்களைக் கொண்டாடும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இது அமையும்.
பினாங்கு,
பாடாங் போலோவில்
நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், கால்பந்து ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இதில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் அதேவேளை, நாடு முழுவதிலிருந்தும் வரும் இளம் கால்பந்து வீரர்களின் ஆர்வம், விடாமுயற்சி மற்றும் திறமையை நேரில் காணுமாறும் அன்புடன் அழைப்பதாக அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.


