
எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 41 இந்திய மாணவர்களுக்கு மலேசிய சீரடி சாய்பாபா இயக்கம், பிபிஎன் மாணவர் தங்கும் விடுதி நிருவாகம், சுவாமி ஐயப்பன் பக்தி இயக்கம் மற்றும் ஜொகூர் ஜெயா டீரி உள்ளிட்ட நான்கு இயக்கங்களின் சார்பில் நேற்று சிறப்பு செய்யப்பட்டது.
2026 ஆம் ஆண்டு சாதனை மாணவர் விழா பிரிக்பீல்ட்ஸ் சீரடி சாய்பாபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் வணக்கம் மற்றும் இறை வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் டிஎல்எஸ் மணியம் வரவேற்புரையாற்றினார்.

இந்த விழா, வெற்றி பெற ஆதரவு தந்து மடிக்கணினிகளையும் வழங்கிய நல்லுள்ளம் களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் சிறப்பு வருகை தந்து விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
எஸ்டிபிஎம் தேர்வு மிகவும் கடினமானது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 மாணவர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

சன்வே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டத்தோ டாக்டர் அகமுத்து பெரிய தம்பி இந்த விழாவில் சிறப்புரையாற்றினார்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் டத்தோ சங்கரன், ஜெயா டீரி தலைவர் கிருஷ்ணசாமி, விவேகஸ்ரீ ராஜரத்தினம், வெற்றி வேலன் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர் .


