
நாட்டின் 69-ஆவது மெர்டேக்கா தினத்தை(விடுதலை நாள்) முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒற்றுமை மெதுவோட்டம் நடைபெற்றது.
மஇகா சிலாங்கூர் மாநிலம் செலாயாங் தொகுதிக்குட்பட்ட New Green Park கிளைத் தலைவரும் சிலாங்கூர் மாநில முன்னாள் தலைவருமான எம்பி ராஜா முன்னெடுப்பி-லும் ஒருங்கிணைப்பிலும் இந்த சுதந்திர நாள் ஒற்றுமை மெது ஓட்ட நிகழ்ச்சி, எழுச்சி-யுடன் இன்று காலையில் நடைபெற்றது.

சுதந்திரம் என்பது நமக்கு சும்மா கிடைத்து விடவில்லை என்பதை இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டவும் முன்னைத் தலைவர்கள் ஆற்றிய ஈடு இணையற்ற தியாகத்தை எடுத்துரைக்கவும் குறிப்பாக அவர்களின் உழைப்பினால் விளைந்த சுதந்திரத்தை குடிமக்கள் அனைவரும் மதித்து போற்றவும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று எம் பி ராஜா மெது ஓட்டத்தை தொடங்கி வைக்குமுன் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருமித்த சமுதாயமாக வாழ வேண்டும் என்ற ஒருமைப்பாட்டு உணர்வை ஏற்படுத்துவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மூவினங்களையும் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய 600 பேர் கலந்து கொண்டனர்.

மஇகா குண்டாங் கிளைத் தலைவர் டத்தோ முருகையா உள்ளிட்ட தலைவர்கள், மஇகா-வினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற ஆசிரியரும் நூல் ஆசிரியரும் தன்முனைப்புப் பேச்சாளருமான மு கணேசன் அறிவிப்பு பணிவுடன் வழிநடத்தினார்.



