Saturday, September 12, 2026

கடந்த ஆண்டு 90 ஆயிரம்; இந்த ஆண்டு 1.3மி. வெள்ளி: மாநில அரசு தமிழ்ப் பள்ளிகளுக்கு அதிக நிதி! -பாப்பா ராயுடு

கடந்த ஆண்டைவிட நிகழும் 2026-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி ஒதுக்கி இருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு இன்று தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடு ஒவ்வொரு மாணவருக்-கும் பள்ளி பேருந்து கட்டணமாக 300 வெள்ளி வழங்கப்பட்டதுடன் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தல், பள்ளி பொறுப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் இன்று காலையில் ஷா ஆலம் Dewan Jubli Perak Sultan Abdul Aziz கட்டட வளாகத்தில் உள்ள அரங்கத்தில் ஏராளமான தமிழ் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டுப் பண்ணுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

ஆர். வள்ளிக் கண்ணன், சி. முனுசாமி, கி. கற்பகம், கி. இராஜசேரன், சா.விஜயலட்சுமி, ச.குமார், சரசுவதி செங்கன், அ. ஜோன் பொஸ்கோ, எஸ்.எஸ். பாண்டியன் ஆகிய முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சிறப்-பிக்கப்பட்டனர். எஸ். விமலா தேவி உடல் நலக் குறைவு காரணமாக வரவில்லை.

சிறப்புரை ஆட்சி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பந்திங் தொகுதியை சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராயுடு நிகழ்ச்சி நிறைவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினைக்கு கட்டங்கட்டமாக தீர்வு என்பதில் மாநில அரசு அமைப்பு பற்றி வருவதாக பாப்பராய்டு தெரிவித்தார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை