Monday, April 20, 2026

இந்தோனேசிய அதிபரின் உடலில் இருப்பது இந்திய மரபணுவா, திராவிட மரபணுவா?

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ-Prabowo Subianto, தன் உடலில் இந்திய மரபணு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உலகில் இந்திய மரபணு என்ற மரபணு எந்த மனிதருக்கும் இருக்கவே வாய்ப்பில்லை!

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின விழா, மூன்று நாட்களுக்கு முன் ஜனவரி 26 ஆம் நாள் புதுடில்லியில் கொண்டாடப்பட்டது.

அதில் இந்தோனேசியாவின் எட்டாவது அதிபர் பிரபோவோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட இவர், ஓர் அரசியல் தலைவர் என்பதுடன் ஒரு வர்த்தக பிரமுகரும் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலுமாவார். இந்தோனேசியாவில் இராணுவ ஜெனரலாக இருப்பவர்கள் அந்த நாட்டின் அதிபராக வருவது புதிது அல்ல; இவருக்குமுன் சுகர்னோ, சுசிலோ பம்பாங் ஆகியோரும் இந்தோனேசியாவின் அதிபராக இருந்திருக்கின்றனர். அந்த வகையில் இவர் மூன்றாவது அதிபர்.

இவர் நேற்றைய முன்தினம்தான் ஜனவரி 27 திங்கட்கிழமை, மலேசியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டு இருந்தார். மலேசிய மாமன்னர் மாண்புசால் இப்ராகிம் இஸ்கந்தார் அழைப்பை ஏற்று காலையில் வந்தவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சந்தித்தது, இரு தரப்பு உறவு தொடர்பான பேச்சுகள் என எல்லாவற்றையும் முடித்துவிட்டு மாலையே தாயகத்திற்கு திரும்பினார்.

அதற்கு முதல் நாளில்தான் இந்தியாவின் முக்கியமான குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பிரபோவோ, அவருக்கு அளிக்கப்பட்ட தேநீர் விருந்தின்போது உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், தனக்கு இந்திய மரபணு இருப்பதாகத் தெரிவித்தார். அதுவும் சில வாரங்களுக்கு முன்னர்தான் தன் உடலில் மரபணு சோதனை மேற்கொண்டதாகவும் அதன்படி இந்த உண்மை தெரிய வந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.

இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பன்னெடும் காலமாக நாகரீக-கலாச்சார தொடர்பு நீடிப்பதாகவும் அப்போது அவர் பேசினார். தவிர இந்திய இசை சம்பந்தமான பாடல்களை கேட்கும்பொழுது தான் உடனே நடனமாட தொடங்கி விடுவதாகவும் இன்பம் பொங்க கூறினார். இதைக் கேட்ட இந்திய பிரதமர் நரேந்திர தாஸ் தாமோதர மோடியும் இந்திய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தங்கரும்(Jagdeep Dhankar) வாய்விட்டு சிரித்து இன்பம் கொப்பளித்த முகத்துடன் ரசித்தனர்.

இவ்வாறு பிரபோவோ பேசிய நேரத்தில் அவரின் இடப்பக்கத்தில் மோடியும் வலப்பக்கத்தில் தங்கரும் அமர்ந்திருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியப் பிரதமர் துன் மகாதீரும் தன் உடம்பில் இந்திய ரத்தம் ஓடுவதாக பட்டம்படாமல் பேசினார்.

உண்மையில் இந்திய இரத்தம், இந்திய மரபணு என்பவை இருக்கின்றனவா?

பதினெட்டாம் நூற்றாண்டுவரை உலக வரலாற்றில் இந்தியா என்ற நாடே இல்லை. மாறாக அந்தத் துணைக் கண்டத்தில் இருந்த 56 நாடுகளையும் தனித்தனி அரசர்களும் குறுநில மன்னவர்களும் ஜமீன்தார்களும் ஆண்டு வந்தனர்.

அந்த தீபகற்ப மண்டலத்தில் கிழக்கிந்திய கம்பெனி உருவான பின்னர்தான் இந்தியா என்ற கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டது. அதற்கு ஏதுவாக ஏற்கனவே அடித்தளம் இட்டவர்கள் முகலாய சாம்ராஜ்யத்தினர்.

அந்த 56 தேசங்களில் சோழ, பாண்டிய, சேர அரசுகளும் அடங்கும்.

அத்தகைய சோழப் பெருந்தேசத்திலிருந்துதான், இராஜேந்திர பெருமன்னன் இந்த மலையகத்தின் கெடா மண்டலத்திற்கு படையெடுத்து வந்தார். அப்பொழுது இந்தியா என்ற நாடு, அடியோடு கிடையாது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மண்ணை, தமிழ் மன்னர்கள் தான் ஆண்டு வந்தனர் .

இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள இன்றைய இந்திய துணைக் கண்டத்தில் இரண்டே இரண்டு மரபணுக் கூறுகள் தான் உள்ளன. அவற்றில் அந்த மண்ணுக்கே உரிய பாரம்பரிய திராவிடர் அல்லது தமிழர் மரபணு. அடுத்தது, மெசபடோமியா மண்டலத்தில் இருந்து வந்து சேர்ந்தவர்களான ஆரியர்கள் அல்லது பிராமணர்களின் மரபணு.

பல்வேறு காரணங்களால் இடம் விட்டு இடம் பெயர்ந்துகொண்டே வந்த ஆரியர்கள் இன்றைய இந்திய நிலப்பரப்பை வந்தடைந்தவுடன் அந்த செழுமையான பூமியில் நிலைக்கத் தொடங்கினர்.

அதனால் பல்வேறு கதைகளை கூறிக்கொண்டும் சொர்க்கம் நகரம் மறுபிறவி ஆகியவற்றை இணைத்து புனைந்த கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டும்
அதற்கு தடையாக இருக்கும் எதையும் அழிப்பது முடியாவிட்டால் தன் வயப்படுத்துவது என்னும் குயுக்தியை துணைகொண்டும்
குறிப்பாக குரு குலங்களின் மூலம் புனைவேதக் கதைகளை பரப்பியும் வந்தனர்.

அத்தகைய கதைகளில் ஒன்றுதான் உலகை படைத்த பிரம்மாவின் முகத்தில் பிராமணர்கள் பிறந்தார்கள் என்றும் பிரம்மாவின் தோள்பட்டையில் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும் தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும் பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் தீண்ட தகாதவர்களான பஞ்சமர்களுக்கும் தாழ்ந்த குடியினருக்கும் பிரம்மாவின் உடலில் இடமே இல்லை என்றும் ரிக் வேதத்தின் மூலம் பரப்பி வந்தனர்.

பண்டாரத்தார் நிர்வாகத்தில் இருந்த பழனி ஆண்டவர் ஆலயத்தையும் தமிழர் கட்டிய சிதம்பர பெருங்கோயிலையும் இப்படித்தான் கதைகளின் மூலம் வளைத்துக் கொண்டவர்கள் இந்த பிராமணர்கள்.

இவ்வாறு, ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமான பண்பாட்டு- அரசியல் போர் பல ஆயிர ஆண்டுகளாக நிலை பெற்றுள்ளன.

அதே வேளை, பௌத்த மதம் உலகெங்கும் பரவிய நேரத்தில், இலங்கை, இந்தோனேசியா
போன்ற நாடுகளில் பாலி மொழி பரவியது.

அந்த பாலி மொழி சொற்களைத்தான் இந்தோனேசிய மக்களின் அன்றாட வாழ்வில் சமஸ்கிருத சொற்கள் கலந்திருப்பதாக பிரபாவோ குறிப்பிட்டு இருப்பாரோ என்று கருதவும் இடம் உண்டு.

எது எவ்வாறாக இருந்தாலும் அன்றுமுதல் இன்று வரை திராவிட ஆரியப்போர் ஏதோவொரு வகையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தொல் தமிழ் இனத்திற்கும் இந்தியர்களுக்கும் போர் என்று வரலாற்றில் எங்குமே இல்லை திராவிடர் அல்லது தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும்தான் மறைமுக அல்லது பண்பாட்டு யுத்தம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

ஆக மொத்தத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகில் எந்த மூலையிலும் இந்திய மரபணு என்ற ஒன்று இல்லவே இல்லை இன்றைய இந்திய துணை கண்டத்தில் இருப்பது தமிழர் மரபணு அல்லது திராவிட மரபணு முதலானது
அடுத்தது இந்த மண்ணிற்கு வந்து சேர்ந்த ஆரியர்களின் மரபணு.

அந்த வகையில் இந்தோனேசியாவின் அதிபர் குறிப்பிட்டிருப்பது திராவிட மரபணுவாகத்தான் இருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் மகாதீரின் உடலிலும் கலந்திருப்பது இந்திய ரத்தமாக இருக்க முடியாது திராவிட ,இரத்தமாகத்தான் இருக்க முடியும்.

உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சிகளின்வழி கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓட்டு எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பை ஆணித்தரமாக நிரூபிக்கும் தரப்பினருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்துள்ளார்.

பக்தி இலக்கியமான திருமுறை பாடல்கள் பதிக்கப்பட்ட ஓலை சுவடிகளை சிதம்பர சன்னிதானத்திலேயே கரையானுக்கு இறையாக்கியது; போகிப் பண்டிகையின் போது எரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள்; 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிக்காகோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு சமய பாராளுமன்ற கூட்டத்திற்கு ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு வந்த கடிதம்தான் சுவாமி விவேகானந்தருக்கு கொடுக்கப்பட்டது என்ற உண்மை மறைக்கப்பட்டது; தமிழரின் தொல் பெருமையை நிலைநாட்டும் கீழடி, ஆதிச்சநல்லூர் பூம்புகார் போன்ற இடங்களில் பொதிந்துள்ள தமிழர்தம் தொல்பெருமை இன்றளவும் மறைக்கப்படுவது உள்ளிட்ட சூட்சுமத்தை வரிசையாக இணைத்து பார்த்தால் நற்றமிழர்களுக்கு பல உண்மைகள் விளங்கும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை