
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 37 தமிழ்ப்பள்ளிகள்!நாட்டில் 155 தமிழ்ப் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தை எதிர் நோக்கி உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 24 தமிழ்ப் பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் இருந்தனர்.
இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 37 பள்ளிகளாக அதிகரித்து உள்ளது.
இதில்
பேராக்கில் 14 தமிழ்ப்பள்ளிகளிலும் கெடாவில் 7 தமிழ்ப்பள்ளிகளிலும் பகாங்கில் 6 தமிழ்ப்பள்ளிகளிலும் சிலாங்கூரில் 1 தமிழ்ப்பள்ளியிலும் ஜோகூரில் 6 தமிழ்ப் பள்ளி களிலும் நெகிரி செம்பிலானில் 2 தமிழ்ப்பள்ளியிலும் மலாக்காவில் 1 பள்ளியிலும் 10க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றனர்.
இந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களைக் காப்பாற்றா விட் டால் அவை விரையில் மூடப்படும் அபாயத்திற்குத் தள்ளப்படும்.
இந்தப் பள்ளிக்கூடங்கள் மூடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இடமாற்றம் அவசியமாகின்றது என்று மலேசிய தமிழ்க் கல்வி அரசு சாரா ச்இயக்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அருண் துரைசாமி தெரிவித்தார்.
தவிர, 30க்கும் குறைவான மாணவர்களை
கொண்ட 155 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்யத் தவறினால் அந்தப் பள்ளிகளுக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
தற்போது 155 தமிழ்ப் பள்ளியில் 30க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.
இதில் ஜொகூரில் 25, கெடாவில் 25, கிளாந்தான் மாநிலத்தில் 1, மலாக்காவில் 4, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 18, பகாங் 13, பேராக் 55, பினாங்கு 2 மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் 12 பள்ளிகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்
கடந்த 40 ஆண்டுகளில் கிராமப்புறங்கள், தோட்டப்புறங்களில் இருந்து இந்தியர்கள் பெரிய அளவில் நகர்ப்புறங்களுக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 89 விழுக்காட்டு இந்தியர்கள் இப்போது நகரங்களில்தாம் வாழ்கிறார்கள்.
இந்நிலையில் 67 விழுக்காடு தமிழ்ப் பள்ளிகள் இன்னும் கிராமப்புறங்களிலும் தோட்டப் புறங்களிலும்தான் செயல்படுகின்றன.
இவற்றுள் 62 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள் தோட்டங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமைந்திருக்கின்றன.
பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், ஜோகூர் பாரு போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் புதிய தமிழ்ப்பள்ளிகள் தேவை.
குறைந்த மாணவர்கள் உள்ள 155 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்தால் மாணவர்கள் எண்ணிக்கை 100,000ஆக உயரும் என்று அவர் சொன்னார்
இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்திற்கு மேல் இருந்தது.
இந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் இணைந்த மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வண்ணம் உள்ளது.
காரணம் இந்தியர்கள் அதிகம் உள்ள இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் கிடையாது.
இப்போது தமிழ்ப் பள்ளியில் 73,000 மாணவர்கள் மட்டுமே இருப்பது வேதனையான செய்தி என்று மலேசியத் தமிழ்க் கல்வி அரசுசாரா இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெற்றி வேலன் இன்று கோலாலம்பூர் Brickfields-இல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் .


