Monday, May 25, 2026

அனைத்து பெண்களுக்கும் 2025 உலக மகளிர் தின வாழ்த்து: இந்து சங்க துணைத் தலைவர் கணேஸ் பாபு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் கு கணேஸ் பாபு அனைத்து மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகளிர் என்பவர்கள் சமுதாயத்தின் அடித்தளம். அவர்களின் உழைப்பு, தியாகம், அறிவு, திறமை ஆகியவை சமுதாயத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய நவீன காலத்தில், மகளிர் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து, தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளனர்.

இந்து சங்க மகளிர், தங்களுடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு சேவை செய்வதில் முன்னணியில் உள்ளனர். அவர்களின் பணி மற்றும் பங்களிப்பைப் பாராட்டும் அதேவேளை, இன்னும் பல துறைகளில் முன்னேறி, சமத்துவம் மற்றும் நீதி நிறைந்த சமுதாயத்தை இவர்கள் உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து மகளிருக்கும் நலம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை கிட்டட்டும் என கு. கணேஸ் பாபு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை