Monday, April 20, 2026

எங்களுக்கும் சம உரிமை வேண்டும்: – மாற்றுத் திறனாளிகள் சார்பில் பிரான்ஸ் சிவா கோரிக்கை

கண் தெரியாதவர்களும் மாற்றுத் திறனாளிகளும் பிச்சைக்காரர்கள் இல்லை. எங்களை இழிவாக எடைபோட வேண்டாம் எங்களுக்கும் சம உரிமை கொடுங்கள் என்று ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா இன்று அழுத்தமாக வலியுறுத்தினார்.

நாட்டில் அதிகமான கண் தெரியாதவர்களும் மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர்.

பல ஆண்டுகளாக நாங்கள் பல பிரச்சினைகளையும் இன்னலையும் எதிர்நோக்கி வருகிறோம்.

எங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பல பலமுறை கோரிக்கைகள், மனுக்களைக் கொடுத்துள்ளோம். ஆனால், எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

தற்போது மடானி அரசாங்கத்தின் ஆட்சியிலும் அதே நிலைதான் நீடிக்கிறது.

தலைநகர் சுற்று வட்டாரங்களில் பார்வையற்றவர்கள் நடந்து செல்வதற்காக சிறப்புத் தடங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தடங்களில் பொறுப்பற்றவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் அன்பரசி என்பவர் கீழே விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது; அவரின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்வையற்றவர்கள் நடந்து செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்தினால் அவர்களால் எப்படி நடந்து செல்ல முடியும். ஆகவே கோலாலம்பூர் மாநகர மன்றம் விரைந்து இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று மதியம் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முன் அணிதிரண்ட அவர்கள், தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை