Monday, April 20, 2026

திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9-ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பு

2025 மே மாதம் 9,10,11-ஆம் நாட்ககளில் திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு நடைபெற இருக்கின்றது.

இம்மாநாடு தமிழ்நாட்டில் இயங்கிவரும் இஸ்லாமிய இலக்கியக்
கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கிறது இம்மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியப் பேராளர்களுக்கு அழைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இதற்குமுன் மலேசியாவில் நடத்திய ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான டத்தோஸ்ரீ முஹம்மது இக்பாலிற்கு தமிழகத்திலிருந்து அதிகாரப்படியான அழைப்பு வந்துள்ளது.

இந்த அழைப்பை
ஏற்றுக் கொண்டு மலேசியப் பேராளர்கள் ஒருமித்த குழுவாக செல்வதற்கான ஏற்பாட்டிற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு, தமிழ் இலக்கியப் பற்று கொண்டவர்களையும் தேசிய இயக்க தலைவர்களையும் உள்ளடக்கி இருக்கும்.

பெர்மிம் தலைவர் ஷேக் ஃபரிதுதீன், கெப்பிமா முன்னாள் தலைவர் முகம்மது, சிம்ஸ் இயக்கத்தின் தலைவர் டத்தோ எம்.இசட். கனி, டத்தோ ஹாஜி காசிம் அலியா, மாவார் முன்னாள் தலைவர் ஹாஜி பஷீர் அஹமது போன்றவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநாடு வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து அம்மாநாட்டில் மலேசியாவும் பங்கெடுக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மலேசியா சார்பாக முக்கியமான சில பரிந்துரைகள் இஸ்லாமிய இலக்கியக் கழகத்திற்கு வழங்கபட்டுள்ளன. அதன் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை