Monday, April 20, 2026

செந்தூல் தண்டாயுதபாணி ஆலய மண்டலாபிஷேகத்தில் ஜெயபக்தி நிறுவனர் கலந்து கொண்டார்

கோலாலம்பூர் செந்தூல் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நேற்று மார்ச் 19-ஆம் நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் இந்த ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதன் தொடர்பில் 48 நாட்களுக்கு தொடர்ந்து பூசை நடைபெற்று வந்த நிலையில் நேற்று 48-ஆவது நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடர்பில் பிற்பகல் 3:00 மணி அளவில் சங்கு பூசையும் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றன.

மாலை ஏழு மணி அளவில் சண்முக அர்ச்சனையும் தீப ஆராதனையும் நடைபெற்ற பொழுது ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் உரிமையாளர் ரத்தோ டாக்டர் கு செல்வராஜ் கலந்து கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை