
கோலாலம்பூர், மார்ச் 23:
மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மணிமன்ற நாள் விழாவில் 15 பேருக்கு மணிப்பட்டம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசியத் தலைவர் முருகன் மணியம் தலைமையில் இன்று கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ(Jalan Sultan Azlan Shah), Star Banguet Hall என்னும் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மணிமன்ற நாள் கொண்டாடப்பட்டது.

மலேசிய இந்தியர் விளையாட்டு- கலாச்சார அறவாரியத் தலைவர் டத்தோ மோகன் தர்மராஜ் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டு இந்த விழாவை அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் நெடிய பயணத்தில் துணைநின்று பெரும் பங்காற்றியவர்களில் 15 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மணிப்பட்டம் வழங்கப்பட்டது.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் மேநாள் உதவித் தலைவர்களான ரவீந்திரன் பெருமாள்(மணிச் சக்கரவர்த்தி), தொப்ளா கவுண்டர் கோவிந்தசாமி(மணிச் சக்கரவர்த்தி), மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை நிர்வாக மன்ற முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ராமசாமி (மணி மைந்தன்), பேரவையின் நிர்வாகமன்ற மேநாள் உறுப்பினர் தேவேந்திரன் குஞ்சு குட்டன் (மணி மைந்தன்), கெடா மாநில செயலவை முன்னாள் உறுப்பினர் மணியம் நாகலிங்கம் (மணி மைந்தன்), தேசிய உதவி தலைவர் ஜோன் கென்னடி சவேரியார் (மணி வேந்தன்), மணி மன்ற சிலாங்கூர் மாநிலத் தலைவர் பாலா சந்திரபிரகாசம் (மணித் தளபதி), மணிமன்ற பேராக் மாநிலத் தலைவர் தேவேந்திரன் கலைச்செல்வம் (மணிச்செம்மல்), மணிமன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் நாராயணன் சண்முகவேல் (மணிச்செம்மல்), மணிமன்றப் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி ரேணுகா தேவி ராமசாமி (மணிச்செல்வி), மலாக்கா மாநில செயலவை உறுப்பினர்களான இரவிக்குமார் நடேசன் (மணித் தளபதி), மற்றும் குமார் ஆறுமுகம் (மணிச்செம்மல்), ஜோகூர் மாநில மேனாள் செயலாளர் இரத்தினகுமார் சுப்பிரமணியம் (மணி திலகம்), சிலாங்கூர் மாநில முன்னாள் பொருளாளர் ராமசாமி நடேசன்(மணிச்சம்மல்), ‘நினைவில் வாழும்’ மணிபிரதாபன் செல்லமுத்துவிற்கு மணிரத்னா பட்டங்கள் வழங்கப்பட்டன.
மணிபிரதாபன் செல்லமுத்து விருதை அவரின் துணைவியார் பெற்றுக் கொண்டார்.


