
தமிழ் மலர் நாளிதழ் ஆசிரியர் கு.தேவேந்திரன் இன்று ‘மணி மைந்தன்’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் மணிமன்ற நாள் இன்று கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது.
மணி மன்ற தேசியத் தலைவர் முருகன் மணியம் தலைமையிலும் டத்தோ த. மோகன் முன்னிலையிலும் மன்ற மணிகளின் எழுச்சிமிகு உணர்வோடு நடைபெற்ற இவ்விழாவில் மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் வெகு நீண்ட காலமாக பயணிக்கும் கு. தேவேந்திரனுக்கு மணி மைந்தன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


